tamilnadu

img

ஸ்மார்ட் திட்டத்தை கைவிட கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் திட்டத்தை கைவிட கோரி  மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,  ஜூலை 20 - மின்வாரியத்தில் அர சாணை 100-ன்படி 12.2. 2024-இல் ஏற்பட்ட ஒப்பந் தத்தை ரத்து செய்து, அரசு  உத்தரவாதத்துடன் கூடிய  ஒப்பந்தமாக மாற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத்  திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். ஸ்மார்ட் திட்டத்தை கை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, சிஐடியு தமிழ்நாடு மின் உழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்வா ரிய பொறியாளர் அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பெரம்பலூர் மேற் பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மண்டல செய லாளர் எஸ்.அகஸ்டின், ஓய்வுபெற்ற நல அமைப் பின் வட்ட தலைவர் சம்பத்  தலைமை ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஓய்வுபெற்ற அமைப் பின் வட்டச் செயலாளர் ராஜ குமாரன், ஓய்வுபெற்ற அமைப்பு மாவட்ட நிர்வாகி கள் உரையாற்றினர்.