tamilnadu

img

ஸ்கேன் இந்தியா

தாவல்

தாவல் நாடாளுமன்றத் தேர்தலின்போது வாய்ப்பு மறுக்கப்படாததால் பாட கர் பவன் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். தான் போட்டியிட்ட தொகுதி யில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் குஷ்வாகா வை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது இடத்தை அவர் பிடித்தார். தற்போது மீண்டும் அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர அமித் ஷா முயல்கிறார். ஒருபுறம்,  நிதிஷ் குமாரைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வ தற்கு சிராக் பஸ்வானைப் பயன்படுத்துகிறார் கள். சிராக் பஸ்வானைக் கட்டுப்படுத்தவே பவன் சிங்கை உள்ளே இழுக்கிறார்கள். அமித் ஷாவை கேட்காமலேயே சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட சிராக் பஸ்வான் முடிவெடுத்ததை அமித் ஷாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அடுத்து, பவன் சிங்கைக் கட்டுக்குள் வைத்து கொள்ள யாரைக் கொண்டு வரப் போகிறார் களோ என்று பாட்னாவில் உள்ள பாஜக அலுவல கத்தில் நமுட்டுச் சிரிப்புடன் கட்சிக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

பூசல்

தில்லி கிரிக்கெட் வாரியத்தில் கோஷ்டிப் பூசல் உச்சத்துக்கு  சென்றுள்ளது. 23 வயதுக்குட் பட்ட தில்லி கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்வதற்கான குழுவின் கூட்டம் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. தேர்வுக்குழு கூட்டத்தின்போது உள்ளே வந்து  அமர்ந்து கொண்ட மூன்று வாரிய இயக்குநர் கள் எழுந்து போக முடியாது என்று கூறியிருக் கிறார்கள். இப்படிக் கூட்டங்களில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், இல்லை யேல் கூட்டங்களை நடத்த விட மாட்டோம் என்று அந்த இயக்குநர்கள் மிரட்டுவது தனக்குத் தெரியாது என்று தில்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரோகன் ஜெட்லி சரடு விட்டிருக் கிறார். வாரிசு அரசியலை எதிர்க்கிறோம் என்று பேசிக் கொண்டே நம் மீது அருண் ஜெட்லியின் மகனைத் திணித்திருக்கிறார்கள் என்று வாரிய த்தின் மூத்த உறுப்பினர்கள் புலம்புகிறார்கள்.

உருட்டல்

 எந்த அளவுக்கு வளர்ச்சி தேவையோ,  அவ்வளவு இல்லை என்று நாட்டின் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் வேலையின்மைப் பிரச்சனை பெரும் அளவில் உள்ளது. இதைத் தீர்க்க வேண்டுமானால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12 விழுக்காட்டிற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகிறார்கள். வேலைக்கான சந்தை படு மோசமாக இருக்கிறது என்பதைக் கவ னத்தில் கொண்டே அவர்கள் இதைத் தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஆண்டுதோறும் 2 கோடி வேலைகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி வெறும் உருட்டலாகவே நின்று போனது. 2025 ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட நகர்ப்புறப் பெண்களில் 25.7 விழுக்காட்டினர் வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். நடப்பு நிதியாண்டில் 6.5 விழுக்காடு உயர்வே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. தட்டல்..!!

வேலையை விட்டு நீக்கப்பட்ட தை ஊழியர்கள் கைதட்டி வரவேற்றார்கள் என்று  மேலாளர் ஒருவர் போட்ட பதிவு வைரலாகி யுள்ளது. இத்தனைக்கும் ஒருவர், இருவர் அல்ல. மொத்தமாக 2 ஆயிரம் பேரை வேலையை விட்டு தூக்கியிருக்கிறார்கள். அந்த மேலாளர் மற்றும் பணியில் தொடரும் ஊழியர்கள் அந்தப் பதிவை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை யைச் சொல்லி வேலையில் இருந்து தூக்கினோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. ஏதோ வேலையிழந்து நிற்பதை தீபாவளி போலக்  கொண்டாடாதீர்கள். வேலையில் இருந்து  தூக்கப்பட்டதை யாரும் கைதட்டிக் கொண்டாட மாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒரு நாடக நிகழ்வு என்றும் சிலர் விமர்சிக் கின்றனர்.