மருத்துவர் தினம்: கொத்தங்குடி ஆரம்ப சுகாதார மருத்துவருக்கு சிபிஎம் நேரில் வாழ்த்து
கும்பகோணம், ஜூலை 1- ஜூலை 1 மருத்துவர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி ஆரம்ப சுகாதாரம் நிலையம் மருத்துவர் ஷோபனா மற்றும் செவிலியர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன் நாகமுத்து உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர், மருத்துவருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும், கும்பகோணம் நகரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் பல கிராமங்கள் மக்கள் பயன்பெறும் வகையில், நீண்ட நாட்களாக பணிபுரியும் கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷோபனா மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், நோயாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்திட, நவீன மருத்துவ இயந்திரங்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.