‘பரிவாஹன்’ பெயரில் வரும் வாட்ஸ்ஆப் லிங்க்-களை திறக்க வேண்டாம்! சைபர் கிரைம் எச்சரிக்கை
சென்னை, செப்.30 - ‘பரிவாஹன்’ என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் வரும் போலி லிங்க்கு களை கிளிக் செய்ய வேண்டாம் என தமிழக இணையவழி குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. போக்குவரத்துத் துறையின் பரிவா ஹன் செயலி பெயரில் போலி லிங்குடன் ஏபிகே கோப்புகள் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற லிங்க்குகளை கிளிக் செய்தால் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணம் திருடப்படலாம் என சைபர் காவல் துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொ டர்பாக நிலுவைத் தொகை உள்ளதா கவும் செய்திகள் அனுப்பப்படுகின்றன. அவற்றையும் கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை அத்த கைய விவரங்களை அனுப்பாது என்று சைபர் காவல்துறை கூறியுள்ளது. அதிகாரப்பூர்வ இ-செலான், பரிவா ஹன் இணையதளமான echallan.parivahan.gov.in-ல் மட்டுமே இ- செலான்களை சரிபார்க்க வேண்டும். போக்குவரத்துத் துறையின் குறுஞ் செய்திகள் டிராயின் அங்கீகரிக்கப்பட்ட VAAHAN-G என்பதுடன் முடிவடையும். அறிமுகம் இல்லாத ஏபிகே கோப்பு களை பதிவிறக்க வேண்டாம். இணையவழி குற்றப் புகார்களுக்கு 1930 எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in -ல் பதிவு செய்யலாம். உடனடியாக புகார் செய்தால் பண மோசடி நடக்கும் வங்கிக் கணக்கு கள் முடக்கப்பட்டு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல பங்குச்சந்தை வர்த்த கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாக வரும் போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் குறித் தும் கவனமாக இருக்குமாறு சைபர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்ஸ்டா, வாட்ஸ்ஆப்பில் வரும் 100 சதவீத ரிட்டர்ன் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும், செபியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவ னங்களை சரிபார்த்த பிறகு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
