ஒரே நாளில் முகாம் நடத்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
திருப்பூர், அக்.15- அனைத்துவகை மாற்றுத்திற னாளிகளுக்கும் தனித்தனியாக முகாம் நடத்துவதற்கு மாறாக, ஒரே நாளில் முகாம் நடத்த வேண் டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. அக்.15 பார்வையற்றோர் பாது காப்பு தினத்தை முன்னிட்டு, உல கம் முழுவதும் வெண்கோல் தின மாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி பார்வையற்றோர் வாழ்வா தார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாநி லம் முழுவதும் இயக்கம் நடத்துவ தாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆகி யோரை புதனன்று நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
ஒரே இடத்தில் முகாம் நடத்துக!
அம்மனுவில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, உதவித் தொகை விண்ணப்பம் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களுக்காக திருப்பூர் ஆட்சி யர் அலுவலகத்தில் ஒரே நாளில் நடைபெற்ற முகாமில் பயனடைந்து வந்தனர். தற்போது திடீரென மாற்று இடத்தில் வெவ்வேறு வகை மாற் றுத்திறனாளிகளுக்கு தனித்தனி இரு நாட்களில் நடத்துவதாக அறி விக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக் கிறது. இது மாற்றுத்திறனாளிக ளுக்கு சிரமத்தையும், குழப்பத்தை யும், மன உளைச்சலையும் ஏற்படுத் துவதாக உள்ளது. கடந்த காலத் தில் அரசு மருத்துவமனையில் நடத் தப்பட்ட முகாம்களில் கையூட்டு பெறும் நிலை இருந்தது என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண் டும். எனவே, ஏற்கனவே உள்ளபடி ஒரே நாளில் அனைத்து வகை மாற் றுத்திறனாளிகளும் பயன்பெறத் தக்க வகையில் முகாம் நடத்து வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், 100 சதவிகிதம் பார் வைத்திறன் இல்லாதவர்களை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மொத்த அரசு பணிகளில் ஒரு சதவீதம் அவர்க ளுக்கு இட ஒதுக்கீடு, பின்னடைவு பணிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு தேர்வு, அவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி, அனைத்து பிரதான ரயில் நிலை யங்கள் பேருந்து நிறுத்தங்களில் மனித வழிகாட்டிகள், அனைத்து பேருந்துகளிலும் வழித்தடம் நிறுத் தங்கள் பற்றிய அறிவிப்புகள் உள் ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட் டத் தலைவர் ஏ. லோகநாதன், மாவட்டச் செயலாளர் ஆர்.பழனிச் சாமி, மாவட்டப் பொருளாளர் பி. ரோசி, மாவட்ட துணைத்தலைவர் டி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.சுரேஷ், மாநிலக் குழு உறுப்பினர் என்.சஞ்சீவ், மாவட்டக்குழு உறுப்பினர் சண்மு கம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
ஈரோடு
இதேபோன்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தி னர் புதனன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து தலைமையில் பலர் கலந்து கொண் டனர்.
