tamilnadu

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செப்.19-இல் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செப்.19-இல் ஆர்ப்பாட்டம்

சிஐடியு அறிக்கை

சிஐடியு அறிக்கை சென்னை, செப்.16 - மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் போராடுகிற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், அவர்களுக்கு ஆதரவாக வும் சிஐடியு சார்பில் செப். 19 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச்  செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழ கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கை களை வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பயன்கள் வழங்கிட கோரியும் கடந்த 30 நாட்க ளாக தமிழகத்தின் அனைத்துப் பணி மனைகள் முன்பும் காத்திருப்பு போ ராட்டம் நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை உரிய காலத்தில் வழங்கிடவும், பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிலுவைத் தொகை மற்றும்  அகவிலைப்படி வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளுக்காக இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் சங்கத்தை அழைத்து பேசி சுமூக தீர்வுகாண போக்குவரத்துக் கழக நிர்வாகமும், தமிழக அரசும் முன் வராததை கவலையோடு சுட்டிகாட்ட வேண்டியுள்ளது. போராட்டத்துக்கு இடையில் சங்க  தலைவர்கள் போக்குவரத்துத் துறை  அமைச்சரை சந்தித்து பேசிய போது,  தங்களின் கோரிக்கைகள் நியாயமா னது என ஏற்றுக்கொண்ட அமைச்சர், “விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்” என நம்பிக்கை அளித்தார். ஆனால் பிரச்சனை இதுவரை தீரவில்லை.  கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட  பிற துறைகளுக்கு நிதி ஒதுக்குவது போல், போக்குவரத்துத் துறைக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகத்தை பாதுகாக்க முடியும், இதையும் அமைச்சரிடத்தில் கூறியும், அரசு இதுவரை செவி சாய்க்காதது, வேதனையளிக்கிறது. வரும் காலம், பண்டிகை காலம் என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழகம் சுமூகத் தீர்வு காண வேண்டுமென சிஐடியு வலியுறுத்துகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தி யில், மக்களுக்கு எவ்வித இடையூறும்  ஏற்படாத வண்ணம் போராடுகிற தொழி லாளர்களுக்கு ஆதரவாக, தமிழ கத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 19 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென சிஐடியு மாவட்டக்  குழுக்களை மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்தில், சிஐடியுவோடு இணைக்கப்பட்ட சங்கங் களின் தொழிலாளர்கள் பெருமளவில்  கலந்து கொள்ள வேண்டுமென தமிழக  உழைப்பாளி மக்களை சிஐடியு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.