tamilnadu

img

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை ஜனநாயக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை ஜனநாயக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, ஜூலை 18-  புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கடை வீதியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எம். நாராயண மூர்த்தி தலைமை வகித்தார்.  அறந்தாங்கி அருகே, காரணியா னேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பர்வீன் பானு (40). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், தினுசா பானு, நெளபியா ஆகிய  இரண்டு மகள்களுடன் பர்வின் பானு பசு மாடுகளை வளர்த்து பால்  வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று கருங்குழிக்காடு கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாடுகளைப் பிடித்து வரச் சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.  இந்நிலையில், பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு இரத்தக் காயங்களுடன் நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்து கண் மாய் தண்ணீருக்குள் பாறாங்கல்லை வைத்து அழுத்தி கொலை செய்திருந்தது கண்டறியப்பட்டது. உடற்கூராய்வுக்குப் பிறகு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.  இந்நிலையில் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக காளிதாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பர்வீன் பானு பாலியல் பலாத்கார படுகொலையை கண்டித்து நாகுடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தங்கராஜ், தென்றல் கருப்பையா, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் சலோமி,  மாதர் சங்க மாவட்டத் தலைவர் பாண்டிச்செல்வி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுசிலா, சிபிஎம் நகரச்செய லாளர் அலாவுதீன், வாலிபர் சங்க நிர்வாகி கோபால், மாதர் சங்க நிர்வாகிகள் ராதா, பாண்டிச் செல்வி, வி.தொ.ச. ராசு உள்ளிட்டோர் உரையாற்றினர்.  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பர்வீன்பானு வின் இரண்டு மகள்களுக்கு அரசுவேலை வழங்க வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத் தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். 

அறந்தாங்கி அருகே பர்வீன் பானு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாகுடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட காரணியானேந்தல் பர்வீன் பானு மகள்களை சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிபிஎம் தலைவர்கள்

ஆறுதல் பர்வீன் பானு கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கடும்கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன், படுகொலை செய்யப்பட்ட பர்வீன்பானு மகள்கள் தினுசாபானு, நௌபியா ஆகிய இருவரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.  அரசு வேலைவாய்ப்பு ரூ.10லட்சம் இழப்பீடு மேலும், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் கூறும் போது,  ஏற்கனவே தந்தை இறந்த நிலையில் தற்போது தாயும் படுகொலை  செய்யப்பட்டி ருக்கிறார். ஆதரவு இல்லாமல் பெற்றோரை இழந்து தவிக்கும் இரண்டு பெண்பிள்ளை களுக்கும் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு  செய்யும்போது, முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அதேபோல்,  அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்க இழப்பீடு தொகை ரூ.10 லட்சம் வழங்க அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.