tamilnadu

img

கோவையில் 5 சுங்கச்சாவடிகள் மூட முடிவு

கோவையில் 5 சுங்கச்சாவடிகள் மூட முடிவு

கோவை, ஜூலை 25– நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான 28 கிலோமீட்டர் தொலைவு கொண்ட எல் அண்ட் டி  புறவழிச் சாலையில் உள்ள ஆறு  சுங்கச்சாவடிகளில், ஐந்து சுங்கச்சா வடிகள் ஆகஸ்ட் 1 முதல் நிரந்தர மாக மூடப்படுவதாகவும், மதுக்கரை பகுதியில் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டண விதிகளின் படி செயல்படும் எனவும் கோவை  மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 1999ஆம் ஆண்டு எல் அண்ட் டி நிறு வனத்தால் இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. 1999 முதல் 2029 வரை 30 ஆண்டுகளுக்கு சுங்க கட்ட ணம் வசூலிக்கும் உரிமம் எல் அண்ட் டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டி ருந்தது. இதன்படி, நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை ஆறு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்ட போதிலும், இந்த 28 கிலோமீட்டர் புறவழிச் சாலை இருவழிச் சாலையாகவே இருந்து வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனைத் தீர்க்க சாலையை விரிவாக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மத்திய அரசு எல் அண்ட் டி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தி டம் ஒப்படைக்க உடன்பாடு எட்டப் பட்டது. ஜூன் 1 முதல், தேசிய நெடுஞ் சாலை ஆணையம் ஆறு சுங்கச்சா வடிகளிலும் கட்டணம் வசூலித்து, ஒன்றிய அரசின் கணக்கில் செலுத்தி வருகிறது. தற்போது, புதிய ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத் தின் அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 1  முதல் ஐந்து சுங்கச்சாவடிகள் மூடப் பட்டு, மதுக்கரையில் உள்ள ஒரு  சுங்கச்சாவடி மட்டும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது. மேலும், இந்த புறவழிச் சாலையை அகலப்படுத்தவும், பரா மரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். சாலையை பாதுகாப்பானதாக மாற்றவும், வளர்ச்சி பணிகளுக்கா கவும் வசூலிக்கப்படும் சுங்க கட்ட ணம் பயன்படுத்தப்படும் என கோவை ஆட்சியர் பவன்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.