இடி, மின்னல் மரணம்: நிவாரணத்தை ரூ.20 லட்சமாக உயர்த்திடுக! அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, அக்.19 - கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், கழுதூர் அருகே மக்காச்சோள வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்ன பொண்ணு, கணிதா ஆகிய நான்கு விவசாயக் கூலித் தொழி லாளர்கள் இடி-மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங் களுக்குத் தமிழ்நாடு அரசு அறி வித்துள்ள ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் (வி.தொ.ச) வரவேற்றுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் மா.சின்னதுரை எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் ஆகியோர் வெளி யிட்ட அறிக்கையில், “இறந்தவர்கள் அனைவரும் கடும் பொருளாதார நெருக்கடியில் வாடும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆவர். எனவே, அவர்களின் குடும்பங்க ளின் வறுமையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு நிவா ரணத் தொகையை ரூ. 20 லட்ச மாக உயர்த்தி வழங்கிட வேண்டும்” எனவும் வலியுறுத்தி யுள்ளனர்.