tamilnadu

img

கியூப நாட்டின் துணைத் தூதர் சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு

கியூப நாட்டின் துணைத் தூதர் சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு

சென்னை, ஜூலை 11 - கியூப நாட்டின் துணைத் தூதர் அபெல் அபல்லே தெஸ்பாயே வெள்ளிக்கிழமை (ஜூலை 11) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு அலுவல கம் வருகை தந்தார். அவரை, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பி னர் என். குணசேகரன், கே. பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கள் எஸ். கண்ணன், ஜி. சுகுமாறன்,  என். பாண்டி, கே. சாமுவேல் ராஜ்,  டி. ரவீந்திரன், மாநிலக்குழு உறுப் பினர்கள் வெ. ராஜசேகர், கியூப ஒரு மைப்பாட்டு குழுவின் பொதுச்செய லாளர் ஐ. ஆறுமுகநயினார், பொருளாளர் சி.பி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடன் கியூப துணைத்தூதர் அபெல் அபல்லே தெஸ்பாயே கலந்துரையாடினார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் சந்திப்பு

அதைத்தொடர்ந்து, தமிழக அர சின் தலைமைச் செயலாளர் நா. முரு கானந்தத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் கியூப துணைத் தூதர் அபெல் அபல்லே தெஸ்பாயே சந்தித் தார். இந்நிகழ்வின் போது, கியூபா ஒருமைப்பாட்டு குழுவின் பொதுச் செயலாளர் ஐ. ஆறுமுக நயினார், பொருளாளர் சி.பி. கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.