18 ஆண்டு சட்டப் போராட்டம் வெற்றி சிபிஎம், அப்பாவி மக்கள் மீதான பொய் வழக்கு தள்ளுபடி
மயிலாடுதுறை, ஜூலை 2 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம், ஆக்கூர் அருகேயுள்ள அப்பராசப்புத்தூர் கிராமத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் குடி யிருக்க மனை கேட்டு போராடிய அப்பாவி மக்கள் மீதும், மார்க்சிஸ்ட் கட்சியினர் மீதும் துப்பாக்கிச் சூடு((ரப்பர் குண்டு) நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கட்சியின் அப்போதைய தரங்கம்பாடி வட்ட செய லாளரும், தற்போதைய மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான பி.சீனிவாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் 18 பெண்கள் உள்ளிட்ட 56 பேர் மீது பொய் வழக்கு பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, 40 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தனர். இவ்வழக்கு 18 ஆண்டுகள் மயிலாடு துறை, சீர்காழி நீதிமன்றங்களில் நடை பெற்ற நிலையில், வழக்கை தள்ளு படி செய்து அனைவரையும் சீர்காழி நீதி மன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்களுக்கு நன்றியும் பாராட்டும்
18 ஆண்டு காலமாக வழக்கை திறம்பட நடத்தி நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டிய மூத்த வழக்கறிஞர் மயிலாடுதுறை என்.கே என்ற என்.கிருஷ்ணமூர்த்தி, அவரது மகனும் மூத்த வழக்கறிஞரான என்.கே.ராஜ்குமார் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், டி.ஜி.ரவி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், அப்பராசப்புத்தூர் கிராம மக்கள் நேரில் சந்தித்து நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, போராட்டம் குறித்தும் வழக்கு குறித்தும் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறுகையில், “அப்பராசப்புத்தூர் கிராமத்தில் அப்பகுதியில் உள்ள மல்லீஷ்வரன் கோவில் பெயரிலுள்ள இடத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 54 குடும்பத்தினர் காலங்காலமாக வீடுகளை கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் அமையவுள்ள சாலை பணியால் பல ஆண்டு காலமாக தலைமுறை, தலை முறையாக வசித்த வீடுகளை இழந்த மக்கள் அதே பகுதியிலேயே வீடுகளை கட்டி குடியேறினர். அக்கோயிலின் குத்தகைதாரர் எனக்கூறிக் கொண்டு சொந்தம் கொண்டாடிய நிலச்சுவான்தாரர் ராஜாங்கம் என்பவரிடம் சாகுபடிதாரர் என்பதற்கான எந்தவித சான்றும் இல்லா ததால், இப்பிரச்சனையில் தலையிடக் கூடாது என கூறினோம். ஆனால், அப்போதைய மயிலாடுதுறை கோட்டா ட்சியர் ஹனீபா தலைமையில் 18.05.2007 அன்று நடந்த பேச்சு வார்த்தையில் 54 குடும்பங்களுக்கும் குடியிருக்க பொருத்தமான இடத்தை தேர்வு செய்து வழங்குவது என ஒப்பந்தம் போடப்பட்டு வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. மாதக்கணக்காகியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடி மனை வழங்காமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்தினர்.
காவல்துறை, அடியாட்கள் அராஜகம்
இந்நிலையில்தான், கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் எனது (தரங்கம் பாடி வட்ட செயலாளர் பி.சீனிவாசன்) தலைமையில் குடிமனை பட்டா கேட்டு போராட்டத்தை நடத்த திட்டமிட்டு போராட தயாராக இருந்தோம். அப்போது சீர்காழி டிஎஸ்பி மலைச்சாமி, தரங்கம்பாடி வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், பொறை யார் காவல் ஆய்வாளர் முருகன் உட்பட ஆயுதங்களுடன் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள், வருவாய்துறையினர் சாகு படிதாரர் எனக் கூறிக் கொண்ட ராஜாங்கத்தின் அடியாட்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3 கிலோ மீட்டர் தொலைவி லிருந்து அணிவகுப்பாக வந்து அப்பாவி மக்களின் குடிசைகளை பிரித்து எறிந்த னர். வீடுகளிலிருந்த பொருட்களை சூறை யாடி, இருசக்கர வாகனங்களை உடைத்த னர். தடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் தலை வர்கள், கிராம மக்களை கொடூரமாகத் தாக்கி, துப்பாக்கி சூடு நடத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 18 பெண்கள் உட்பட 56 பேரை தாக்கி காவல்துறை வேனில் ஏற்றிச் சென்று பொய் வழக்கு பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 40 நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளியே வந்து, 18 ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்காடி வந்த நிலையில்தான் தற்போது அந்த வழக்கை தள்ளுபடி செய்த சீர்காழி நீதிமன்றம், அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. 18 ஆண்டுகளாக திறம்பட வழக்கை நடத்தி அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டி வெற்றி தீர்ப்பை பெற்றுத் தந்துள்ள மூத்த வழக்கறிஞர் என்.கே.கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் என்.கே.ராஜ்குமார் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு சார்பில் நன்றி தெரிவிக் கிறோம். அப்பராசப் புத்தூரில் வீரமிக்க அந்தப் போராட்டம் குறித்து அப்போ தைய மத்தியக்குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பொறுப் பாளராக இருந்த தோழர் ஜி.ராமகிருஷ் ணன் என்னிடம் “வெண்மணிக்கு பிறகு நடந்த வர்க்கப் போராட்டம் அப்பராசப் புத்தூர் போராட்டம்” என உணர்ச்சியுடன் கூறியதை இப்போதும் நினைவு கூருவதாக பி.சீனிவாசன் கூறினார்.