tamilnadu

img

சிபிஎம் விருதுநகர் மாவட்டக்குழு சார்பில் பெ. சண்முகத்திடம் ரூ. 45 லட்சம் நிதியளிப்பு!

சிபிஎம் விருதுநகர் மாவட்டக்குழு சார்பில் பெ. சண்முகத்திடம் ரூ. 45 லட்சம் நிதியளிப்பு!

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு - அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், நகர்ச் செயலாளர் வி. ஜெயக்குமார் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர் எஸ்.வி. சசிக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம். திருமலை, வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சி. பெனரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  அப்போது, கட்சி வளர்ச்சி நிதி ரூ. 45 லட்சத்து 59 ஆயிரத்து 270-ஐ மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம், மாவட்டச் செயலாளர் ஆ. குருசாமி  வழங்கினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். முத்துக்குமார், பி.என். தேவா,  எம். மகாலட்சுமி, வி. முருகன், எல். முருகன், எம். சுந்தரபாண்டியன், பி. மாரியப்பன், ஆர். பாலசுப்பிரமணியன், எஸ். லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, புயல் குழுவினரின் தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சி, குழந்தைகளின் யோகாசனம் நடைபெற்றது.