tamilnadu

அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் பண வசூல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் பண வசூல்

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, செப். 6 - அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற  மாணவர்களிடம் விதிகளை மீறி  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனி யார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் - கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமது அறிக் கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு மிரட்டும் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் தனியார் நடத்துகிற 22  மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக்கழகங்களிலும், 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவ  மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்  கூட்டங்கள் நடந்து கொண்டிருக் கின்றன. இதில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம், சில தனியார் நிர்வாகங்கள் கூடுதல் கட்ட ணம் செலுத்த வேண்டுமென்று கட்டாயப் படுத்துகின்றன. இதை வெளியே சொன்னால், கல்வியில் தொடர முடி யாது என்று அச்சுறுத்தவும் செய் கிறார்கள்.  அப்பட்டமாக மீறப்படும் நீதிமன்ற உத்தரவுகள் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வா கங்களின் இம்மாதிரியான அணுகு முறையை உச்ச நீதிமன்றமும், உயர்  நீதிமன்றமும் ஏற்கெனவே கடுமையாக  எச்சரித்து இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவக் கல்வி  இயக்குநரகமும் ஒரு சுற்றறிக்கையை அனைத்து மருத்துவக் கல்லூரி களுக்கும் அனுப்பி இருக்கிறது. இருந்த  போதிலும் இந்த விதிமீறலும், பண வசூலும் தொடர்வதாக பெற்றோர்கள் மத்தியில் வந்து புகார்கள் கொண்டிருக் கின்றன. அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவே, மாநில அரசு உடனடியாக தலையீடு செய்து இம்முறைகேட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, பாதிக்கப் பட்ட மாணவர்களிடம் முறையான  விசாரணை நடத்தி நிர்வாகத்திட மிருந்து பணத்தை திரும்பப் பெற நட வடிக்கை எடுக்க வேண்டும்.  விதிமுறைகளுக்கு மாறாக, மாண வர்களிடம் கூடுதல் கட்டணம் வசூ லிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி களின் மீது அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.