tamilnadu

img

சூலக்கரையில் எளிதாக மக்கள் சென்று வர பாதை அமைத்திடக் கோரி சிபிஎம் போராட்டம்

சூலக்கரையில் எளிதாக மக்கள் சென்று வர பாதை அமைத்திடக் கோரி சிபிஎம் போராட்டம்

விருதுநகர், செப்.19- விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலையில்  சூலக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி  துவங்கப்பட்டுள்ளது.  இதற்காக வாக னங்கள் சென்று வந்த சாலைகள் முற்றிலும்  அடைத்து வைக்கப்பட்டுள்ளன. ஏற்க னவே, இருந்த அணுகுசாலை வழியாக கன ரக வாகனங்கள் சென்று வருகின்றன.  ஆனால், நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட அள வின்படி சாலைகள் அகலப்படுத்தப்பட வில்லை. இதனால், கடுமையான போக்கு வரத்து நெருக்கடி அப்பகுதியில் ஏற்பட் டுள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீண்ட தூரம்  சுற்றியே மறுபுறம் செல்ல வேண்டிய நிலை  உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், பொது மக்கள், இரு சக்கர வாகனங்கள், இலகுரக  வாகனங்கள் எளிதில் சென்று வர நட வடிக்கை எடுக்க வேண்டும். அணுகு  சாலை களின் இரு பகுதியிலும் மின்சார விளக்கு கள் அமைக்க வேண்டும். தாதம்பட்டி சாலை யை அகலப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலி யுறுத்தி   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூலக்கரையில் நடைபெற்ற இப்போரா ட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஆர். முத்துவேலு தலைமையேற்றார். வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள்  முத்துமாரி, வள்ளியம்மாள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.