tamilnadu

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் விசாரணைக்கு சிபிஎம் கோரிக்கை

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் விசாரணைக்கு சிபிஎம் கோரிக்கை

மதுரை, அக்.11- மதுரை மாவட்டம் வாடிப்  பட்டி ஒன்றியம், சோழ வந்தான் மற்றும் கருப்பட்டி  அருகே உள்ள அம்மச்சி யாபுரம் கிராமத்தில் சுமார்  500 பேருக்கு மேற்பட்ட மக் கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பட்டியலின மக்கள். இந்த ஊரில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி  கடந்த 4.10.2025 முதல் குடி நீர் வழங்கலை துவங்கியுள்  ளது. ஆனால், குடிநீரில் வாடை வந்ததாக பொதுமக் கள் புகார் அளித்துள்ளனர். 7.10.2025 அன்று மாலை  டேங்க் ஆபரேட்டர் தொட்டி யில் இறங்கி பரிசோதித்த போது, மலக் கலவையை கண்டனர். இதனால் கிராம  மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வேல்பாண்டி, கிளைச் செயலாளர் மற்றும் தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்  தலைவர் செ. ஆஞ்சி மற்றும்  நிர்வாகிகள் செல்வம், கண்  ணன் ஆகியோர் கிராம மக்  களை சந்தித்து விவரங் களை கேட்டறிந்தனர். கிராம மக்களுக்கு மாலை தகவல் தெரிவிக்கப்  பட்டதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் சம்ப வத்தை அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்று, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வலி யுறுத்துவதாகவும், கிரா மத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக நிறைவேற்ற அதி காரிகளிடம் முறையிடுவ தாகவும் தெரிவித்தனர்.