tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

பருத்தி மறைமுக ஏலம் பாபநாசம், ஜூலை 19 - வேளாண்மை விற் பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த பருத்தி மறை முக ஏலத்தில் பாபநாசம்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2088 விவசாயிகள் ரூ.2,41,47,200 மதிப்பு டைய 200.30 மெட்ரிக் டன்  பருத்தியை எடுத்து வந்த னர். இதில் திருப்பூர்,  பண்ருட்டி, விழுப்புரம்,  ஆந்திரா, கொங்கணா புரம், கும்பகோணம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 வணிகர்கள் பங்கேற்று அதிகபட்சம் கிலோவிற்கு ரூ.77.69, குறைந்தபட்சம் ரூ.72.89, சராசரி ரூ.75.79 என விலை நிர்ணயித்தனர். கண்காணிப்பு அலு வலர் சந்திரமோகன் தலை மையில் விற்பனைக் கூட கண்காணிப்பாளர்கள் பிரியமாலினி, சரண்யா முன்னிலையில் நடந்த ஏல முன்னேற்பாடு பணி களை விற்பனைக்குழு பணியாளர்கள் மேற்கொண் டனர். ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு எழுத்துத் தேர்வு அரியலூர், ஜூலை 19 - அரசு விரைவுப் போக்கு வரத்து கழகத்தில் ஓட்டு நர், நடத்துநர் பணியிடங் களுக்கு ஜூலை மாதம்  எழுத்துத் தேர்வு நடைபெ றும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், செந்துறையில் வெள்ளிக் கிழமை அவர் அளித்தப் பேட்டியில், “அரசு விரை வுப் போக்குவரத்து கழ கத்தில் ஓட்டுநர், நடத்து நர்கள் 3,200 பணியிடங் களுக்கான விண்ணப்பங் கள் ஆன்-லைனில் பெறப் பட்டு எழுத்துத் தேர்வு  இந்த மாதம் (ஜூலை) நடை பெற உள்ளது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும். அதன் பிறகு அவர்கள் பணியமர்த்தப்படுவர்” என்றார். கடல் அட்டைகள் வைத்திருந்தவர் கைது  தஞ்சாவூர், ஜூலை 19 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, கொள்ளுக்காடு கடற்கரை பகுதியில், அரசால் தடை  செய்யப்பட்ட கடல் அட்டை களை வைத்திருந்தவரை, கடலோரக் காவல் குழு மத்தினர் கைது செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத் தனர்.  கடலோரக் காவல் குழு மத்தினருக்கு கிடைத்த ரகசி யத் தகவலின் அடிப்படை யில், சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட கொள் ளுக்காடு கடற்கரையில் சந்தேகத்துக்கிடமாக ஒரு  ஊதா நிறக் கேனுடன் ஒரு வர் நின்று கொண்டிருந் தார். அவர், அந்தோணி யார் கோவில் தெருவைச் சேர்ந்த சேசுராஜ் என தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரித்து, அவர்  வைத்திருந்த கேனை சோதனை செய்ததில், அர சால் தடை செய்யப்பட்ட 255 பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை விற்பனைக் காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.  இதையடுத்து கடற் கரை காவல் நிலைய காவ லர்கள்  பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கைப் பற்றி, வழக்குப் பதிந்து,  சேசு ராஜை பட்டுக்கோட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.