நுண்நிதி நிறுவனங்களின் அராஜகத்தை கட்டுப்படுத்துக! மாதர் சங்கம் வலியுறுத்தல்
கும்பகோணம், ஆக.13 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றிய பேரவை கும்பகோணம் விபி சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாதர் சங்க பொறுப்பாளர் கலா தலைமை வகித்தார். கீதா வரவேற்புரை ஆற்றினார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றினார். நூறு நாள் வேலையை 250 நாட்களாக உயர்த்தி தொடர்ச்சியாக வழங்கிட வேண்டும். அரசு சட்டக் கூலி ரூ.336 -ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். குடிமனை இல்லாதவர் களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை மராமத்து செய்ய வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மகளிர் உரிமை தொகை ரூபாய் ஆயிரத்தை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்களின் அடாவடித்தனத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாதர் சங்க கும்பகோணம் ஒன்றியக் குழு தலைவராக ஆர்.கலா, செயலாளராக வீ.அபிராமி, பொருளாளராக நாக லட்சுமி, துணைத் தலைவராக மலர்கொடி, துணைச் செய லாளராக கீதா உட்பட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப் பட்டது.
ஆக.22-க்குள் பேருந்தை இயக்க உறுதி சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு
திருவாரூர், ஆக.13 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், பெரும்பண்ணை யூர், திருவிடச்சேரி, வடவேர், பிலாவடி, கடமங்குடி, நாச்சி யார்கோவில் வழியாக கும்பகோணம் வரை சென்று வந்த தடம் எண்.432-D பேருத்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி சிபிஎம் குடவாசல் தெற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற இருந்த சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) திருவாரூர் மேலாளர் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஆக.22-க்குள் பேருந்தை காலை-மாலை இயக்கிடவும், பேருந்தை முழுநேரம் இயக்குவதற்கு நிர்வாக அனுமதி பெற்று, மீண்டும் இயக்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் செவ்வாய்க் கிழமை பிலாவடி பகுதியில் சிபிஎம் சார்பாக நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. வட்டாட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறப்பினர் ஜி.சுந்தர மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் த.லெனின், நகரச் செயலாளர் டி.ஜிசேகர், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.லெட்சுமி மற்றும் ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள் கலந்து கொண்டனர்
சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
தஞ்சாவூர், ஆக.13 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சர பேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில், சரபேந்திரராஜன்பட்டினம், புதுப்பட்டினம், கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன் கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய ஆயிரக்கணக்கான மனுக்களை பொதுமக்கள் வழங் கினர். இதேபோல, ஆண்டிக்காடு, இரண்டாம்புலிக்காடு, அழகிய நாயகிபுரம் ஊராட்சிகள் தொடர்ந்து பட்டுக்கோட்டை தாலுகாவி லேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
உறுப்பினர்களுக்கு பயிற்சி
தஞ்சாவூர், ஆக.13 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட் பட்ட அரசுப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்களுக்கான பயிற்சி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில், பேரா வூரணி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, காலகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 40 மேற்பட்ட உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மேனகா தலைமை வகித்தார். காலகம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இராமநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண் மைக் குழுவின் பங்களிப்பு குறித்து, பயிற்சியாளர் சிவ ரஞ்சனி பயிற்சி அளித்தார்.
பெண்களுக்கு உதவி வழங்கல்
பாபநாசம், ஆக.13 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சாசன செயலர் திலகவதி சார்பில், ஏழ்மை நிலையிலுள்ள 200 பெண்களுக்கு சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலர் துரை.சண்முகபிரபு தொடங்கி வைத்தார். இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ஜெகதீசன், செயலர் சிக்கந்தர், பொருளாளர் கணேசன், வட்டாரத் தலைவர் முத்தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.