தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க கட்டுமானம், முறைசாரா தொழிலாளர்கள் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, அக்.15 - தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள ரூ.6000 கோடியை அரசின் பிற திட்டங்களுக்கு பயன்படுத்தும் தமிழக அரசு கட்டுமானம், ஆட்டோ, சாலை, போக்கு வரத்து, தரைக்கடை உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர் களுக்கு ரூ.5000 தீபாவளி போனஸ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு கட்டுமானம், ஆட்டோ, சாலை போக்குவரத்து, தரைக்கடை மற்றும் முறைசாரா சங்கங்களின் சார்பில் புதனன்று பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ட்ராங்க் ரோடு பகுதியில் பிரச்சாரம் நடைபெற்று, பின்னர் மன்னார் புரத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவல கத்தில் கண்காணிப்பாளர் நவபாரதியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சங்க மாவட்டச் செய லாளர்கள் கட்டுமானம் மாநகர் சந்திரசேகர், புறநகர் தியாகராஜன், ஆட்டோ மணி கண்டன், தையல் பிரமிளா, பெல் சிஐடியு பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கோரிக்கையை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன், பொது தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜ், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். கரூர் கரூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சரவணன் தலைமை வகித்தார். கட்டுமானச் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் ஆர்.சிங்காரவேலு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், கட்டுமான சங்க மாவட்டச் செய லாளர் சி.ஆர்.ராஜாமுகமது, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டிஎன்பிஎல் தொழி லாளர் சங்க தலைவர் அரவிந்த், ஆட்டோ சங்க செயலாளர் என்.ரங்கராஜன், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
