tamilnadu

img

மக்கள் மனதில் வாழும் மாமனிதர் நூற்றாண்டு நாயகர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி

மக்கள் மனதில் வாழும் மாமனிதர்!    நூற்றாண்டு நாயகர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி

தஞ்சை மாவட்டத்தில் பண்ணையடிமைகளாகப் பாவிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடி, நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை அடித்து நொறுக்கிய தோழர் பி.சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்களின் வர்க்கப்படைத் தளபதியாகத் திகழ்ந்தவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி. 2025ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று அவரது நூற்றாண்டு விழா எழுச்சிகரமாகத் தொடங்குகிறது. ஒரு நூற்றாண்டு கடந்தும் அவரது போராட்ட வரலாறும், அர்ப்பணிப்பும், மக்கள் நலன் மீதான அசாத்தியப் பற்றும் இன்றைய தலைமுறைக்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறது.

 அடிமைத்தனத்தில்  அமிழ்ந்து கிடந்த கிராமத்தில் கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் 1940- களில் நிலவுடமையாளர்களின் கொடுங் கோன்மை உச்சத்தில் இருந்தது. விவசாயக் கூலித் தொழிலாளர்களை சாணிப்பாலை கரைத்து வாயில் ஊற்றுவது, சாட்டையால் அடிப்பது, விடிவதற்கு முன்பு வயலில் இறங்கி இருட்டிய பின்பு கரையேறச் செய்வது, பிள்ளை களைப் பள்ளிக்கூடம் செல்லவிடாமல் மாடு மேய்க்கச் செய்வது என அடக்குமுறை வடிவங்கள் எண்ணற்றவை. ஆண்டைகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, மனித கண்ணிய மின்றி வாழ வேண்டிய கொடுமை தாழ்த்தப் பட்ட மக்களை நசுக்கியது. இத்தகைய கொடுமைகள் நிறைந்த கீழத்தஞ்சையில் நாகப்பட்டினம் தாலுகா விளத்தூர் கிராமத்தில் 12.10.1926இல் சாத்தன்-அமிர்தம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் தனுஷ்கோடி. தேசிய மற்றும் மாநில இயக்கங்களின் செயல்பாடுகள் இருந்த போதிலும், விவசாயக் கூலித் தொழிலா ளர்களின் அவலநிலை மாறவில்லை என்பதை சிறுவனான தனுஷ்கோடி நேரடி யாகக் கண்டார். அவர்களுக்கான விடுதலை எங்கிருந்து வரும் என்ற கேள்வி அவரது இளம் மனதில் ஆழமாகப் பதிந்தது. செங்கொடியால் வந்த  விடுதலை வெளிச்சம் இந்த காலகட்டத்தில் தான், மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் மன்னார்குடி அருகே தென்பரையில் விவசாயிகள் ச ங்கத்தைத் தொடங்கி, தஞ்சை மாவட்டக் கிராமங்கள்தோறும் வாய்க்காலிலும் வரப்பி லும் பகல் இரவு பாராமல் நடந்து சென்று விவசாயிகளையும் விவசாயத் தொழிலா ளர்களையும் அணிதிரட்டினார். நிலஉடமை யாளர்களின் கொடுஞ்செயலுக்கு முடிவு கட்டும் போராட்டம் நூற்றுக்கணக்கான கிராமங்க ளில் வேர்கொண்டு வீறுகொண்டது. இதைக் கேட்டறிந்த இளைஞர் தனுஷ் கோடி, பி.எஸ்.ஆரை களப்பாலில் சந்தித்து, தனது கிராமத்தில் நிலவும் அடக்குமுறைகளை விவரித்து அழைப்பு விடுத்தார். பி.எஸ்.ஆர் விளத்தூர் வந்து மக்களுக்கு தெம்பூட்டி சங்கம் அமைத்தார். செங்கொடி பறந்தது. ஒரு கலம் நெல்லுக்கு இரண்டு மரக்கால் கூலி வழங்க வேண்டுமென்ற முதல் போராட்டம் வெற்றி யைத் தந்தது. கேள்வி கேட்பாரற்றுக் கிடந்த மக்களுக்கு உண்மையான விடுதலை வெளிச்சம் கிடைத்தது. போராடினால் வெல்ல லாம் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது. தனுஷ்கோடி ஊர் போற்றும் தலைவராக உயர்ந்தார். மக்கள் மனங்கவர்ந்த பிரதிநிதியாக 1958இல் பாங்கல் ஊராட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தனுஷ் கோடி, 30 ஆண்டுகள் செயல்பட்டு தமிழ்நாட்டி லேயே தலைசிறந்த ஊராட்சியாக பாங்கலை மாற்றினார். குடிநீர், சாலை, கல்வி என அனை த்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, மக்கள் நலனை முன்னிறுத்திய ஊராட்சி நிர்வாகத்திற்கு முன்னோடியாக விளங்கினார்.  தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக மூன்று முறை (1970-1989) திறம்படப் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று ஊராட்சிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று ஊராட்சி களிலும் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், அவரது நேர்மையாலும் தலைமைப் பண்பு களாலும் மாற்று அணியின் ஊராட்சித் தலை வர்களும் அவரை ஆதரித்து ஒன்றியப் பெருந்தலைவராக வெற்றிபெறச் செய்தனர். கட்சி எல்லைகளைக் கடந்து மக்கள் மனங்க ளை வென்றவர் என்பதற்கு இது சாட்சி. திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 1967-1972 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணி யாற்றி, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் பிரச்சனைகளை சபையில் எழுப்பி பல்வேறு தீர்வுகளை எட்டினார். கூலி உயர்வு, நிலப் பகிர்வு, சமூக நீதி என பல்வேறு கோரிக்கை களை சட்டமன்றத்தில் வலுவாக முன் வைத்தார். பள்ளிக்கூடத்து அப்பா எந்தக் கிராமத்திற்குச் சென்றாலும் உழைப்பாளி மக்களின் குழந்தைகளிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவார். கல்வியே விடுதலைக்கான வழி என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகளை யும் பெற்றோரையும் பேசி கல்வியைத் தொடர ஊக்குவித்தார். பல குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை தானே ஏற்று படிக்க வைத்தார். அதனாலேயே அவரைச் சந்தித்த கிராமங்களிலெல்லாம் “பள்ளிக்கூடத்து அப்பா” என அன்போடு அழைக்கப்பட்டார். செங்கொடிக் களங்களில்  வலம் வந்தவர் 1940களில் தொடங்கிய அவரது அரசியல் பயணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் சிறப்பான பணிகளைச் செய்தது. தஞ்சை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கிராமப்புற மக்களை அணிதிரட்டினார். 1982இல் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தனது முதல் மாநில அமைப்பு மாநாட்டை திருத்துறைப்பூண்டியில் நடத்தியபோது, அதன் முதல் மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் நிலத்துக்கான போராட்டம், கூலி உயர்வுக்கான போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு வழிகாட்டி வெற்றிகரமாக சங்கத்தை முன்னெடுத்தார். அதே ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். வாடாமல்லியாக வாழும் தலைவர் எளிய மனிதராகவும் வலிய தலைவரா கவும் வாழ்ந்த தோழர் பி.எஸ்.டி, இன்றும்  அனைத்துப் பகுதி மக்களாலும் போற்றப்படு கிற தலைவராக நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சொந்த வாழ்க்கையில் எளிமையானவர். ஆடம்பரங்களை வெறுத்த வர். மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர். அதேவேளை போராட்டங்களில் அசாத்திய வீரியம் கொண்டவர். மக்கள் நலனுக்கான போராட்டத்தில் 57 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டன. 9½  ஆண்டுகள் சிறைக்கூடத்திலும், 2 ஆண்டு கள் தலைமறைவு வாழ்க்கையிலும் தனது வாழ்நாளைக் கழித்த அரசியல் வீரர். சிறையில் இருந்தபோதும் தோழர்களுக்கு வழிகாட்டி, போராட்டங்களை திட்டமிட்டு நடத்தினார். எந்தக் கஷ்டமும் அவரது உறுதியைக் குலைக்க வில்லை. நிலப்பிரபுத்துவத்தின் நவீன முகமூடியைக் கிழித்தெறிவோம்! இன்றைக்கு சாதி, மத முகமூடியுடன் கார்ப்பரேட் என்ற நவீன முகத்துடன் நிலப்பிரபுத்துவம் இந்திய மக்களை விழுங்கிட முயல்கிறது. பாஜகவின் மோடி வகையறாக்கள் அனைத்துச் செல்வ வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தந்து, உழைக் கும் வர்க்கத்தை ஓட்டாண்டிகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். உழைப்புச் சுரண்ட லும், சாதி மதம் நோக்கிய சதிராட்டமும் நாளும் உச்சத்தை எட்டுகின்றன.  இந்த நிலையில், தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி காட்டிய வழியில் கிராமப்புற வர்க்கப்படையை வலுவாக அணிதிரட்ட வேண்டும். நவீன நிலப்பிரபுத்துவக் கும்ப லையும், கார்ப்பரேட் சுரண்டலையும் எதிர்த்து உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து வர்க்க விழிப்புணர்வை வளர்க்க வேண்டும். செப்டம்பர் 18, 19 ஆகிய நாட்களில் கோவில்பட்டியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில், பண்ணையடிமைத்தனத்திற்கு எதிரான களம் அமைத்து சமூக, பொருளாதார விடுதலைக்கு முன்நின்ற தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் நூற்றாண்டு விழாவை அக்டோபர் 12, 2025 முதல் 2026 அக்டோபர் வரை ஆண்டு முழுவதும் கம்பீரமாக நடத்து வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அவரது போராட்ட வரலாற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். அவரது கொள்கைகளை பின்பற்றுவோம். அவரது கனவான சுரண்டலற்ற, சமத்துவமான சமூ கத்தை நிறுவுவோம். இந்த நூற்றாண்டு விழாவை வெற்றிகரமாக முன்னெடுப்போம்!