tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு மார்ச் 31- இல் தேர்தல் அறிக்கை வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு மார்ச் 31- இல் தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை, மார்ச்  29 - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை காலை சென்னையில் உள்ள  மாநிலத் தலைமைஅலுவலகத்தில் (பாலன் இல்லம்) நடை பெற்றது. அதைத் தொடர்ந்து, செய்தி யாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்  வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். வேட்பாளர்கள் விவரம் •    தளி - டி.ராமச்சந்திரன் •    திருத்துறைப்பூண்டி(தனி)-     க.மாரிமுத்து •    பவானிசாகர்(தனி)-      பி.எல்.சுந்தரம் •    திருப்பூர் வடக்கு-     எம்.சுப்பிரமணியன் •    ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி)-     பி.மகாலிங்கம் கூட்டணி பலமாக உள்ளது தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மு. வீரபாண்டியன், “சிபிஐ தேர்தல் அறிக்கை மார்ச் 31 அன்று வெளியிடப் படும்.  போட்டியிடும் 5 தொகுதிகளிலும் சிபிஐ வெல்லும்; கூட்டணி 200 தொகுதிகள் என்ற இலக்கையும் தாண்டும். தவெக தலைவர் கூறுவது போல் எங்கள் கூட்டணி உடைபடவில்லை. ஏழைகள் நிறைந்த நாட்டில் அரசு வழங்குவது இலவசம் அல்ல, அது மக்களின் உரிமை. பிரதமர் அடிக்கடி தமிழகத்திற்கு வந்தால் எங்களது கூட்டணியின் வெற்றி இன்னும் இலகுவாகும்; அவர் பேசப் பேச எங்களது வாக்கு வங்கி அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.