tamilnadu

img

மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஆட்சியர் பாராட்டு

மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஆட்சியர் பாராட்டு

திருவாரூர், ஜூலை 2 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை,  ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 295 மனுக்களை அளித்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் (2.0)  கீழ் நீரை பகுப்பாய்வு செய்தல், வெற்றிட  தூய்மை உறிஞ்சி, மூங்கில் மர விதைப்புக்கலன், தண்ணீர் சேமிப்பு தொட்டியை சுத்தமாக வைக்கும் கருவி,  பாதுகாப்பான மின்சாரம், புல் அகற்றும் கருவி, மழை காலத்தில் ஏற்ப டும் விபத்துகளை தடுக்கும் கருவி, விபத் துக்கான உடனடி சைகை, குடை வாக னம், செல்போன் வீணாகுவதை தவிர்ப்பது, தொப்பி காற்றாடி உள்ளிட்ட வற்றை கண்டுபிடித்த 12 மாணவ, மாணவியர் குழுக்களுக்கு தலா ரூ.10,000-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கி, பாராட்டி னார்.  தொடர்ந்து, பள்ளி புத்தாக்க மேம் பாட்டு திட்டத்தில் (2.0) அதிகளவிலான மாணவ, மாணவியர்களை பங்கேற்க செய்தமையால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழில் முனை வோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் மூலம் மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கி னார்.