கோவை தீக்கதிர் கட்டட நிதி வழங்கல்
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓடக்காடு கிளை புதிய கட்டிடமான தோழர் கே.தங்கவேல் நினைவகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் அவிநாசி வடக்கு கிளை சார்பில் கிளைச் செயலாளர் தீக்கதிர் சந்திரன், அவிநாசி ஒன்றிய செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, தேவி, கட்டுமான சங்க நிர்வாகிகள் கனகராஜ், கே.ராஜா ஆகியோர், தீக்கதிர் கட்டிட நிதியாக ஒரு லட்சம் ரூபாயை, மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கினர். உடன் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன் உள்ளிட்டோர்.