மாநில அளவில் முத்தரப்புக்குழு அமைக்கக் கோரி சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், செப். 16- மாநில அளவில் முத்தரப்புக்குழு அமைக்கக் கோரி சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கத்தினர் நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ஜோசப் தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செய லாளர் எம்.ஐடா ஹெலன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட பொரு ளாளர் பி.இந்திரா, சிஐடியு மாநில செய லாளர் எம்.தங்கமோகனன், மில் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாணிக்க வாசகம் ஆகியோர் ஆதரித்து பேசினர். சங்க மாவட்டச் செயலாளர் வி.சந்திரகலா கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். சிஐடியு குமரி மாவட்டச் செயலாளர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ் நிறைவுரையாற்றினார். இதில், நலவாரிய பணப்பலன் களை இரட்டிப்பாக்கி உடனடியாக வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கூலி உயர்வு வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். தையல் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட வேண்டும். இபிஎம் ஐ காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்டுள்ள வாரிய அட்டைகளை ஆக்டிவேட் செய்திட வேண்டும். தையல் தொழிலாளர் களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு கூலி உயர்வு, அடையாள அட்டை, லக்கேஜ் கட்டணம், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
