tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்  வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு

சென்னை, ஜூலை 8 - தொழிற்சங்க உரிமைகளையும் தொழிலாளர் உரிமைகளையும் பறிக்கும் ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை (ஜூலை 9) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (எம்யுஜெ) ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் தலைவர் எல்.ஆர். சங்கர், பொதுச்செயலாளர் வி. மணிமாறன் ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.  அதில், “பத்திரிகையாளர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம்-1955, ஊதியக்குழு சட்டம் மற்றும்  தொழில் தகராறு சட்டம் உட்பட 44 சட்டங்களை நீக்கி விட்டு, நான்கு சட்டத் தொகுப்புகள் கொண்டுவரப் பட்டுள்ளன. இவை பணிப் பாதுகாப்பை முற்றாக அழித்து விட்டு ஒப்பந்தப் பணி முறையை நடைமுறைப்படுத்தக் கூடியது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையையும் தொழிலாளர் உரிமைகளையும் பறிக்கக்கூடியது” என்று குறிப்பிட்டுள்ளனர். “இத்தகைய தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பாமகவில் அதிகார மோதல் உச்சம்:  அன்புமணிக்கு எதிராக தீர்மானம்

திண்டிவனம், ஜூலை 8- பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனும் பாமக செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்த நிலையில், கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பொதுவெளியில் ராமதாசின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையில் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2026 இல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறக் கூடிய வகையில் கூட்டணி அமைக்க ராமதாஸ்க்கு அதிகாரம், நிறுவனருக்கு களங்கத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு  முழு அதிகாரம் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கவுரவத் தலைவர் கோ.க. மணி எம்எல்ஏ, பொதுச்செயலாளர் முரளி சங்கர், இணைப் பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ, பொரு ளாளர் சையத் மன்சூர் உசேன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதற்கிடையில் பாமக செயல் தலைவர் அன்புமணியும் தனியாக கூட்டம் அறிவித்துள்ளார்.

பொன்முடி வழக்கை  எப்படி முடிக்க முடியும்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜூலை 8 - முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பேச்சு வெறுப்பு பேச்சு  வரம்புக்குள் வருவதாக கூறி, நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது, “பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒருவரைக் கொன்றுவிட்டு நான் கொல்ல விரும்ப வில்லை என மீண்டும் கூற முடியுமா? சைவ, வைணவ பிரிவுகள் தொடர்பாக இஷ்டம்போல் கருத்துகள் தெரி விப்பது சரியா?” என்று கேள்வி எழுப்பினார். “நீதிமன்றம் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்க முடியாது என்றும் இது ஜனநாயக நாடு” என்றும் நீதிபதி தெரிவித்தார்.

திமுக எம்.பி.க்கள்  ஜூலை 25-ல் பதவியேற்பு

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மநீம தலைவர்  கமல்ஹாசன் ஆகியோர் ஜூலை 25 அன்று மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.

அவதூறு பரப்ப வேண்டாம்:  டிஎன்பிஎஸ்சி அறிக்கை

சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் ஆதாரமின்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையத்தின் மீது அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிடு வதையே வாடிக்கையாகக் கொண்டு அரசியல் கட்சிகளால் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியை தடுக்க  முடியாது : சேகர் பாபு

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி  அமைக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள் ளார். திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவுக்குப் பின் பேட்டியளித்த அமைச்சர், இனி எப்போதும் திமுக ஆட்சி தான் என்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மருத்துவப் பணியாளர் நியமனத்திற்கு நடவடிக்கை

சென்னை: தேசிய நலவாழ்வுக் குழுமம் அறிவுறுத்தலின்படி, காலியாக உள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பநர்கள் பணியிடங்கள் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார சங்கங்கள் வாயிலாக 2,500 செவிலியர்கள், 1,500 மருந்தாளுநர்கள் மற்றும் ஆய்வக நுட்பநர்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

ஜூலை 18 - திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதுகுறித்து ஆலோசிக்க ஜூலை 18 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி யின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 18 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள  முரசொலி மாறன் வளாகத்தின் கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

180 அரசு கல்லூரிகளில்  4,711 பேராசிரியர்கள்

சென்னை, ஜூலை 8 -  தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வில் அரசு முறையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 180 அரசு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு 15 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊடகங்களில் 1,500 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என வெளியான தகவல்கள் தவறானவை. உண்மையில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியாற்றுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 2015-க்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படாததால் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய அரசு 4,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆணை வெளியிட்டுள்ளது. ஆனால் 54 வழக்குகள் தொடரப்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி காலிப்பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 58 நிலை-I அரசுக் கல்லூரிகளில் 46 நிரந்தர முதல்வர்கள் பணியாற்றுகின்றனர்.  “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் 41 லட்சம் மாண வர்கள் பயன்பெற்றுள்ளனர். “புதுமைப் பெண்” மற்றும்  “தமிழ்ப் புதல்வன்” திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000  உதவித்தொகை வழங்கப்படுகிறது. அகில இந்திய  அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலி டம் வகிக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.