சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகைச் சான்று
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார். அதன்படி, அவர்களது படைப்புகளை நூல்களாக வெளியீடு செய்வதற்கு முதல் தவணை நிதியுதவியாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் காசோலையாக வழங்கப்பட்டது. இதில் நலத்துறையின் ஆணையர் த.ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் எஸ்.அண்ணாதுரை மற்றும் எழுத்தாளர்கள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.