tamilnadu

img

அய்யா வைகுண்டர் சிறை வைக்கப்பட்டதன் 185 ஆவது ஆண்டு நினைவு நடைபயணம்

நாகர்கோவில், நவ.20- அய்யா வைகுண்டர் சிறை வைக்  கப்பட்டதன் 185 ஆவது ஆண்டை  நினைவு கூர்ந்து  திருவனந்தபுரம் நோக்கி நடைபயணம் மேற் கொண்டுள்ள பாலபிரஜாபதி அடிக ளாருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மார்த்தாண்டத்தில் வர வேற்பு அளிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யில் திருவிதாங்கூர் மன்னரால் ஒடுக்  கப்பட்ட 18 சாதி மக்களை ஓரணியில் திரட்ட முனைந்தவர் அய்யா வை குண்டர். ஆண்டான் அடிமையாக யாரும் இருந்துவிடக்கூடாது என்ப தில் உறுதியாக இருந்தவர், “அவன வன் தேடும் முதல் அவனவன் வைத்  தாண்டிடுங்கோ, எவன் எவனுக்கும் பதறி இனி அலைய வேண்டாமே” என போதித்து எழுச்சி ஊட்டினார்.  அக்காலத்தில் ஆண்கள் முழங்  காலுக்கு மேல் வேட்டி கட்டக்கூடாது.

பெண்கள் தோள்சீலை அணியக்  கூடாது என்றெல்லாம் நிபந்தனை கள் விதித்து தீண்டாமை கொடு மைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இத்தகைய சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிரான கலகக் குரல் எழுப்பியதற்காக அய்யா வைகுண்  டரை திருவிதாங்கூர் மன்னன் மார்த்  தாண்டவர்மா சுவாமித் தோப்பில்  கைது செய்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்து பல்வேறு கொடுமை களை செய்தார். அய்யா வைகுண்டரை திரு வனந்தபுரத்துக்கு அடித்து இழுத்து செல்லப்பட்ட சம்பவம் ஆண்டு தோறும் நினைவு கூரப்பட்டு வரு கிறது. அன்றைய தினம் குமரி மாவட்  டத்தில் சாமிதோப்பில் உள்ள பூவண்டன் தோப்பு முதல் திரு வனந்தபுரம் சிங்காரத் தோப்பு வரை  சுமார் 100 கிலோ மீட்டர் மகா பாத  யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.  அதன்படி 185 ஆவது ஆண்டு நினைவு பாதயாத்திரை வெள்ளி யன்று (நவ.18) பாலபிரஜாபதி அடி களார் தலைமையில் துவங்கியது. வழி நெடுகிலும் பல்வேறு இடங்க ளில் பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்த்தாண்டத்தில் நவம்பர் 19 சனியன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்  தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்  டது. இதில் மாவட்ட தலைவர்கள் ஜெயகாந்தன், அசன், ரத்தினகுமார், இருதயராஜ், விடியல் குமரேசன், குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவர் ஏஎம்வி டெல்பின் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.