மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
தஞ்சாவூர், செப்.15- தஞ்சாவூர் அருகே, வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) முதலாண்டு பயிலும் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மல்லிகா, தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்வில், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 107 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழக அறிவியல் துறை முதன்மையர் பேரா., விஜயலெட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், மாணவர் சேர்க்கை இயக்குநர் முனைவர் சர்மிளாபேகம், துணை இயக்குநர் முனைவர் கிருஷ்ணகுமார், கல்வியல்துறை தலைவர் பேரா தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.