tamilnadu

img

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுகோள்

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை  கட்டுப்படுத்த வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1-  சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட 4  ஆவது மாநாடு தொட்டியத்தில் மாவட் டத் தலைவர் தியாகராசன் தலைமை யில் நடைபெற்றது.  தொட்டியம் ஒன்றிய செயலாளர் தேவராஜ் வரவேற்றார். அஞ்சலி தீர்மா னத்தை வினோத் வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பால சந்திரபோஸ் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கை மாவட்டத் தலைவர் தியாகரா சன் வாசித்தார். வரவு செலவு அறிக்கை  பிரகாஷ் சமர்ப்பித்தார். சிஐடியு புற நகர் மாவட்ட செயலாளர் சம்பத் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில், எம் சாண்ட் ஜல்லி போன்ற  கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டத்தை திருத்தி சட்ட தொகுப்பாக மாற்று வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக  சி.சிவகுமார், செயலாளராக பி. தியாக ராசன், பொருளாளராக ஜெ. மரியபுஷ்பம், துணைத் தலைவர்களாக செல்வகுமார், நித்தி யானந்தம், கிரி, துணைச் செயலாளர்களாக கணேசன், தேவராஜ், வினோத் உள்பட 15 பேர் மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.  நிர்வாகிகளை அறிமுகம் செய்து, சங்க  மாநில உதவிச் செயலாளர் சி.ஆர். ராஜாமுக மது நிறைவுரை ஆற்றினார். ஒன்றிய பொரு ளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.