tamilnadu

டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகள் அறிவிப்பு: வாலிபர் சங்கம் வரவேற்பு

சென்னை,டிச.8- டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தே ர்வுகள் அறிவிப்பை வரவேற்றிருக்கும் வாலிபர் சங்கம், காலிப்பணியிடங்கள் முழுவதும் நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் உள்ள டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும் என்பதாகும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 ஆகியவ ற்றிற்கான பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் வெளியிட்டுள்ளது வரவேற்கிறோம். சமீபத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் ஒட்டுமொத்தமாக மாநில அரசுப் பணி யில் 6 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்ப தாக கூறியிருப்பதை பத்திரிகைகள் வாயிலாக அறிகிறோம். ஏற்கனவே ஒன்றிய அரசின் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் சிறு குறு தொழில்கள் நசிந்து வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. மேலும்   கொரோனோ பெருந்தொற்றுக்குப் பின்  வேலையின்மை செங்குத்தாக உயர்ந்து வருகிறது.

யானை பசிக்கு....

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணை யம் அறிவி த்துள்ள குரூப் 2, குரூப் 4 ஆகிய பணியிடங்கள் 11,086 மட்டுமே. அரசுத் துறையில் 6 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்க 11,086 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுத்த கதையாக உள்ளது. அதுவும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அடுத்த 75 நாட்கள் கழித்து தேர்வுகள் நடத்தப்படும் என்பது மேலும் மேலும் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மூலம், அனைத்து காலிப்பணியிடங்களுக்கும் ஒரே தேர்வு மூலமாக நிரப்ப முன்வரவேண்டும். இந்த தேர்வுகள் ஜனவரி மாதமே நடத்தப்ப டுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்  தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

;