tamilnadu

img

உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை: ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை: ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

கோவை, செப்.15- உயர்த்தப்பட்ட ஊதி யத்தை தனியார் ஒப்பந்த  நிறுவனம் அபகரித்துக் கொண்டதாக குற்றம்சாட்டி, கோவையில் திங்களன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நூற் றுக்கும் மேற்பட்ட ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், தங்களுக்கு உரிய ஊதிய உயர்வு  வழங்கப்படவில்லை என்றும், 12 மணி நேரம் அகவிலைப்படி இல்லாமல் பணி யாற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, 2025 ஆம் ஆண்டிற்காக அரசு அறிவித்த 16%  ஊதிய உயர்வில் 10% மட்டுமே வழங்கப் படுகிறது. மீதமுள்ள 6% கபளீகரம் செய்யப் பட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர். முழு  ஊதிய உயர்வை நேர்மையாக வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போதிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து தமிழக அரசிடம் கேட்டால், ஒப்பந் தம் எடுத்த தனியார் நிறுவனத்திடம் வழங்கி யுள்ளோம் என்கின்றனர். ஆம்புலன்ஸ் சேவையை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந் தம் வழங்கிவிட்டு, எங்களை அலைகழிக் கின்றனர். மேலும், 108 ஆம்புலன்ஸ்களில் போதிய வசதிகள் இல்லை. பழுதடைந்த ஆம் புலன்ஸ்களை இயக்கி வருகிறோம். இது குறித்து சுகாதாரத் துறை மற்றும் அதிகாரி களிடம் புகார் தெரிவித்தபோது, நிதி ஒதுக்கப் படவில்லை என அலட்சியமாக பதிலளிக் கின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்த  போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்த னர்.