tamilnadu

img

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி  அனைத்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக். 6-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனை  வருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் சொந்த மாவட்டங்களில் அருகாமையில் பணி நியமனம் செய்ய வேண்டும். தகுதி யுள்ள களப்பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.