அரசு போக்குவரத்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு
மயிலாடுதுறை, ஜூலை 1 - மயிலாடுதுறை மாவட் டம், பொறையாரிலுள்ள தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக பணி மனையில் ஓட்டுநர், நடத்து நர்கள், ஊழியர்களுக்கான குளிர்சாதன இயந்திரம் பொருத்தப்பட்ட குளிரூட்டப் பட்ட ஓய்வறை திறப்பு விழா நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் ராஜா தலை மையில் நடைபெற்ற விழா வில் பூம்புகார் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், ஊழியர் களுக்கான குளிரூட்டப் பட்ட அறையை திறந்து வைத்து உரை யாற்றினார். நிகழ்ச்சியில் கிளை மேலாளர் ஆசீர்வாதம், திமுக தெற்கு ஒன்றிய செய லாளர் அப்துல் மாலிக், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, துணைத் தலைவர் பொன்.இராஜேந்திரன், நகரச் செய லாளர் முத்துராஜா, தொமுச வீரமணி, ஓட்டுநர், நடத்து நர்கள், பணிமனை ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.