tamilnadu

பாஜகவுடன் கூட்டணியால்  சோர்வடைந்த அதிமுக தொண்டர்கள்

பாஜகவுடன் கூட்டணியால்  சோர்வடைந்த அதிமுக தொண்டர்கள்

அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

அரியலூர், ஜூலை 7-  பாஜகவுடன் கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் மனம் சோர்ந்துள்ளனர் என்றார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு. அரியலூரில்திமுக பாகநிலை முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, அவர் பேசுகையில், “பாஜக கூட்டணியில் இணைந்தவுடன், அதிமுக தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர். ஆட்சி அமைந்தால், அந்த அமைச்சரவையில் பாஜகவும் பங்குபெறும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆகையால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. பாமகவினருக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, நமக்கு ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்த அரியலூர், பெரம்பலூரில் அது நமக்கு ஒரு கூடுதல் பலம். பாஜகவினர், தாங்கள் தேர்தலில் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், திமுக வெல்லக் கூடாது என நினைக்கின்றனர். அதனால்தான் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர். அதற்கெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை’’ என்றார்.