கொள்ளிடம் கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்
அரியலூர், ஆக.20 - அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மேட்டூர் அணை யிலிருந்து 50,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொறுத்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதி கரிக்கக் கூடும். எனவே அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள், ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக் கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப் பாட்டவோ செல்ல வேண்டாம். கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால் நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்” என அறி வுறுத்தியுள்ளார்.
தவறான தகவல் அளித்து போலீசாரை அலைக்கழித்த இளைஞர் கைது
தஞ்சாவூர், ஆக. 20 - தஞ்சாவூரில் தவறான தகவலை தெரிவித்து காவல் துறையினரை அலைக்கழித்து, வழக்கமான பணியை செய்ய விடாமல் தடுத்த இளைஞர் கைது செய்யயப்பட்டார். தஞ்சாவூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை இரவு கைப்பேசியில் பேசிய நபர், மாரியம்மன் கோவில் அரு கேயுள்ள கிராமத்தில் தனது காதலியைப் பார்க்க வந்த போது, அப்பெண்ணையும், தன்னையும் சிலர் அரிவாளால் வெட்டியதாகவும், தான் தப்பித்து ஓடிக் கொண்டிருப்பதாகவும், தன்னைக் காப்பாற்றுமாறும் கூறினார். இதைத் தொடர்ந்து, இரு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். இதில், தான் காதலித்த பெண் திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றியதால், அவரையும், அவரது குடும்பத்தின ரையும் அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக காவல் துறைக்கு பொய்யான தகவலை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து, தவறான தகவல் அளித்த கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் இளந்தை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த செல்வகுமாரை (23) காவல் துறையினர் தேடி வந்த நிலையில், அவர் செவ்வாயன்று கோடியம்மன் கோயில் அருகே படுத்திருந்தார். காவல் துறையினரை பார்த்ததும், அவர்களைத் தள்ளிவிட்டு தப்பியோட முயன்ற போது, அவரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர்.
மருதுபாண்டியர் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர், ஆக.20 - தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி, நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்க ளின் தலைவர் கொ.மருதுபாண்டியன் துவக்கி வைத்து பேசி னார். மருதுபாண்டியர் கல்லூரி IQAC இயக்குநர் ல.மது கிருத்திகா, உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் இரா. இராஜகுமார், உயிர் வேதியியல் துறைத் தலைவர் வே.இராம மூர்த்தி ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் நடுவர் நீதிபதி சோழவேந்தன் கலந்து கொண்டு பேசினார்.