tamilnadu

ஆதவ் அர்ஜுனாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மை திமுக எம்.பி., கனிமொழி விமர்சனம்

ஆதவ் அர்ஜுனாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மை திமுக எம்.பி., கனிமொழி விமர்சனம்

சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இடும் பதிவு உச்சக் கட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது என திமுக எம்.பி., கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி, கட்சித் தலைவர், நிர்வாகிகள் என ஒருவர் கூட  இன்னும் கரூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்  கூறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார். சம்பவம் நடந்த நாளன்று மக்களைச் சந்தித்து ஆறு தல்கூட சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். ஆனால் தமிழக அரசும், திமுக நிர்வாகிகளும்தான் சம்பவம் நடந்ததில் இருந்து இப்போது வரை மக்க ளுக்கு ஆறுதலாக நிற்கிறார்கள் என்றார். இது குறை சொல்லும் நேரம் கிடையாது. முதல மைச்சர் ஸ்டாலின் கூட இப்போதும் மக்களுக்கு துணை யாகவே பேசி வருகிறார். தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூ னாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மையை காட்டு கிறது என்று கனிமொழி கூறியுள்ளார். முன்னதாக தனது எக்ஸ் பதிவில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா,  சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கியிருந்தார். சாலை யில் நடந்து சென்றாலே தடியடி, சமூக வலை தளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது, இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறிப் போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்று அவர் பதிவிட்டிருந்தார்.