நிலத்தை ஆக்கிரமிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
ராணிப்பேட்டை, செப்.24- நிலத்தை ஆக்கிரமிக்கும் நபர் மீது நடவடிக்கையுடன், பட்டா மாற்றி தர வேண்டி மாற்றுத்திறனாளி சகோதரி களுடன் புதனன்று (செப் 24) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். கலவை வட்டம், ஆயிரமங்கலம் மதுரா, சியாம் பாடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கஸ்தூரி, பத்மாவதி, சாந்தா, வெண்ணிலா சகோதரிகள் அவர்க ளுடைய 5 ஏக்கர் நிலத்தை உறவினர் ஏழு மலை ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரி புதனன்று (செப் 24) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சகோதரிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். சியம்பாடி கிராமத்தில் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த நிலத்தை சகோதரிகள் பெயரில் கூட்டு பட்டாவாக பதிவு செய்யக் கோரி வட்டாட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மனமுடைந்த வயதான ஆதரவற்ற மாற்றுத்திறனாளி கஸ்தூரி மற்றும் சகோதரிகளுடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அதிகாரிகளிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி கஸ்தூரி புகார் மனு அளித்துள்ளார்.