நாகர்கோவில், ஆக.23 நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து பணிமனையில் உள்ள அறை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் அரசு விரைவு போக்குவரத்து பணி மனை செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள அறை ஒன்றில் பேருந்தின் பழைய சீட்டுகள் மற்றும் பொருட்கள் போடப்பட்டு இருந்தது. இந்த அறையில் புதன்கிழமை மதியம் 12.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று பரவிய தையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதைப் பார்த்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 வண்டிகளில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து ஏற்பட்ட தையடுத்து அண்ணா பேருந்து நிலை யம் மற்றும் மீனாட்சிபுரம் சாலையில் கடுமையான புகை மண்டலங்கள் ஏற்பட்டது. தீவிபத்தில் பணிமனையை ஒட்டி உள்ள உணவகம் ஒன்றின் ஒருபுற மும் எரிந்து சேதம் அடைந்தது. அந்த உணவகத்தின் கண்ணாடிகள் மற்றும் பைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டது. இது குறித்து போக்குவரத்துக் கழக ஊழி யர்கள் கூறுகையில், பணிமனையை ஒட்டி உள்ள உணவகத்தின் மாடியில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி உள்ளனர். அந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ளவர்கள் தண்ணீரை ஊற்றினார்கள். அதன் பிறகு தான் பணிமனையில் பழைய பொருட்கள் வைத்திருந்த அறையில் தீ எரிந்தது என்றனர். இது தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் போக்குவரத்துக் கழக அதி காரிகள் புகார் செய்தனர். புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் பணிமனை யில் தீவிபத்து ஏற்பட்டதா? உணவகத் த்தில் ஏற்பட்டதா? தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.