tamilnadu

img

விமானப் படையில் பறந்து காப்பீட்டு ஊழியராகத் தரையிறங்கி மக்களுக்காகக் களமாடிய தோழர்

விமானப் படையில் பறந்து காப்பீட்டு ஊழியராகத் தரையிறங்கி மக்களுக்காகக் களமாடிய தோழர்  

பொதுக் காப் பீட்டு நிறு வனத்தில் வேலை செய்தபோதே பொதுமக்களைக் காக்கும் தொண்டிலும் ஈடுபட்டு, அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்  இப்போ தும் இயக்கப் பணியாற்றிக் கொண்டிருக்கிற ஒரு முன்னோடியை இப்போது சந்திக்க இருக்கிறோம். அவர்தான் தோழர் ஆர். வைகுண்டம். 1936ஆம் ஆண்டில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிராமத்தில்  ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தவர் வைகுண்டம். கிராமத்தில் பள்ளிப்  படிப்பை முடித்து தூத்துக்குடி நகரப் பள்ளியில் இண்டர்மீடியட் (11, 12ஆம் வகுப்புகள்) படித்தார். தொடர்ந்து கல்லூரிக்குச் செல்லாமல் திருச்சிக்குச் சென்று விமானப் படைத் தேர்வு களில் பங்கேற்றார். எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று 1954இல் விமானப்படையில் சேர்ந்தார். 1962ஆம் ஆண்டு இந்திய - சீன எல்லைப் போர், 1965இல் இந்திய - பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது வைகுண் டம் எல்லையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 1969இல் கோவை மாவட்டத்தின் சூலூர் விமானப்படைத் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டில் மெட்ராஸ் மோட்டார் அண்டு  ஜெனரல் இன்சூரன்ஸ் என்ற தனியார் காப்பீட்டு  நிறுவன வேலையில் சேர்ந்தார். அதற்கடுத்த ஆண்டில் அந்நிறுவனம்  தேசவுடைமையாக்கப் பட்டது. பல நிறுவனங்களை இணைக்கப்பட்டு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (யுஐஐசி) என்ற குழுமமாக  சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. அப்போது அதில் பணியாற்றிய ஊழியர் களுக்கான தொழிற்சங்கம் தோழர் ஆர். சந்தா னம் தலைமையில் இயங்கியது. அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தினுடைய (ஏஐஐஇஏ) தலைவர்களில் ஒருவரான என்.எம். சுந்தரம் ஊழியர்களிடையே நிகழ்த்திய உரையால் ஈர்க்கப்பட்ட பலர் சங்கத்தில் சேர்ந்தனர். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஏஐஐஇஏ–யுடன் இணைக்கப் பட்டது. இதில் தோழர் வைகுண்டம் முனைப்புடன் செயல்படலானார். 1970ஆம் ஆண்டிலேயே வைகுண்டம் சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டார். அப்போது ஆயுள், பொது என இருவகைக் காப்பீட்டு ஊழியர்கள் அனைவருக்குமான ஊதிய உயர்வுக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு சங்கம்  அறைகூவல் விடுத்தது. காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற அந்த முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதோடு கிளையின் அனைத்து ஊழியர்களும் இணைந்தி டச் செய்தார். பொதுத்துறையானதன் பலன் முன்பு 106 தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவை  மோசடி களில் ஈடுபட்டதால், அப்போதைய ஒன்றிய அரசு அவசரச் சட்டத்தின் மூலம் 1971 மே 13இல் அவற்றைத் தேசியமயமாக்கியது. முறை யாகத் தேசியமயமாக்கலுக்கான சட்டம் 1972இல் நிறைவேற்றப்பட்டு, அதன் விளை வாக நான்கு நிறுவனங்கள் 1973 ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தன. இந்த நிறு வனங்கள், சமூகத் துறை சார்ந்த பல காப்பீட்டுக் கொள்கைகளையும், கிராமப்புறக் கொள்கை களையும் அறிமுகப்படுத்தி எளிய மக்களுக்குச் சேவையாற்றத் தொடங்கின. உதாரணமாக, விவசாய பம்ப் செட் காப்பீடு, குடிசை காப்பீடு, கால்நடை காப்பீடு, ரூ.5 சந்தாவில் ‘கிராமின்’  தனி மனிதர் விபத்துக் காப்பீட்டுக் கொள்கை போன்ற திட்டங்கள் பொதுத்துறையால் நடைமுறைக்கு வந்தன. திருச்சி மாவட்டத்தில் அக்காலத்தில் பிற துறைகளின் தொழிலாளர் போராட்டங்களிலும் வைகுண்டம் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்டதோடு மற்ற ஊழியர்களும் பங்கேற்கச் செய்தார். “அக்காலத்தில் காப்பீட்டு ஊழி யர் சங்கத்தில் முன்னணியில் செயல்பட்ட தோழர்கள் ஆர். கோவிந்தராஜன், என். சீனி வாசன், ஜெகதீசன் உள்ளிட்டோரோடு இணைந்து  பணியாற்றியதில் நிறைய கற்றுக் கொண்டேன், அரசியலிலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது,” என்று வைகுண்டம் கூறினார். “மாவட்டத்தில் கே. வரதராசன், டி.கே. ரங்க ராஜன் ஆகிய தலைவர்களைச் சந்தித்து உரை யாடும் வாய்ப்புக் கிடைத்தது. அது என்னுடைய அரசியல் பார்வையை விரிவுபடுத்தியது,” என்றும் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில்தான்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பின ரானதாகத் தெரிவித்தார். தேடிவந்த பொறுப்புகள் பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் (ஜிஐஐஏ) மண்டல துணைத் தலைவராகவும், மாநில துணைச் செயலாளராகவும் செயல் பட்டிருக்கிறார்.  ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடு கள் அவரை தென்மண்டல துணைத் தலைவர் பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கச் செய்தன.  அதன் செயலாளராகத் தோழர் குருமூர்த்தி செயல்பட்டபோது இவர் துணைத் தலைவராக இருந்தார். மாநில அளவிலும் அகில இந்திய அளவிலும் குருமூர்த்தி, சந்தானம் ஆகியோ ரோடு இணைந்து சங்கத்தை வலுப்படுத்துவதில் வைகுண்டம் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ஊழியர்களுக்கான நாடு தழுவிய போராட்டங் களுக்கு சங்கம் அறைகூவல் விடுத்தபோதெல் லாம் அதை வெற்றிகரமாக நடத்துவதில் முன்னணியில் நின்றிருக்கிறார். இவ்வளவு முனைப்புடன் தொழிற்சங்கப் பணியை நிறைவேற்றுகிற ஒருவரை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்குமா? 1980இல்  திருச்சியின் பிஎச்இஎல் மற்றும் யுஐஐசி நிறு வனங்களுக்கிடையே நடந்த ஒரு ஊழலை அம்பலப்படுத்தி சங்கத்தின் சார்பாக வைகுண்டம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த நிர்வாகம் இவரை  வேலையிலிருந்து இடைநீக்கம் செய்தது. அதை எதிர்த்து ஏஐஐஇஏ தொடர்ச்சியாகப் பல இயக்கங்களை நடத்தியது. திருச்சி மாநகரத்தில் அந்தப் பழிவாங்கல் நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு துறைகள் சார்ந்த சிஐடியு   சங்கங்கள் இயக்கங்களை நடத்தின. நாடாளு மன்ற உறுப்பினரும், ஏஐஐஇஏ தலைவர்களில் ஒருவருமான தோழர் சுனில் மெய்த்ரா இந்தப் பிரச்சனையை மக்களவையில் எழுப்பினார். அதற்குப் பிறகு நிர்வாகம் நடவடிக்கையை விலக்கிக்கொண்டது. இந்த பழிவாங்கல் பணி யிடை நீக்க நடவடிக்கையின் ஆறு மாத காலத்தை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டார் வைகுண்டம். ஈடுபாட்டு உறுதிக்காக இத்தகைய நடவடிக்கைக் காலத்தில் நிறுவனத்திலிருந்து  பிழைப்பூதியம் எனப்படும் சப்சிஸ்டன்ஸ் அலவன்ஸ் என சிறு தொகை தரப்படும். அதைக் கொண்டும், சங்கத் தோழர்கள் மாதாமாதம் கடமையுணர்வோடு அளித்த உதவித் தொகையைக் கொண்டும் குடும்பச் சுமைகளை சமாளித்த அனுபவத்தை அவர் சக தோழர் களுக்குப் பகிர்ந்திடத் தவறுவதில்லை. அவர் களுடைய இயக்க ஈடுபாட்டை உறுதிப்படுத்தவும் அது உதவுகிறது. அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காப்பீட்டு நிறுவனங்களைத் தனியார் மாக்கிட முயன்றபோது நாடு தழுவிய  வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதிலும், வேறு  போராட்டங்களிலும் ஊழியர்களைத் திரளாகப் பங்கேற்க வைப்பதில் வைகுண்டம் முனைப் போடு செயல்பட்டார். அக்காலத்தில் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்தார்கள். 100 நாட்களுக்கு மேல் நீடித்த  அந்தப் போராட்டத்திற்கு ஒருமைப் பாட்டு இயக்கம் நடத்தியதோடு நிதி திரட்டி உதவி யதையும் நினைவுகூர்கிறார்.  சங்கப் பணிகளை நிறைவேற்றியவர், திருச்சி, சிவகாசி, ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய  பகுதிகளில் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரைக் கட்சிக்குக் கொண்டு வருவதில் தலையாய பங்காற்றியிருக்கிறார். சங்கமும் கட்சியும் 1986இல் வைகுண்டம் சென்னைக்குப் பணிமாற்றம் கோரி விண்ணப்பித்தார். தொழிற் சங்கத்தின் முன்னணிச் செயல்பாட்டாளரான இவரை தலைநகருக்கு மாற்ற மறுத்தது நிர்வாகம். அதற்காகவும் ஒரு நீண்ட போராட்டம் தேவைப்பட்டது. அதன் பலனாக 1988இல் திருச்சி யிலிருந்து சென்னைக்கு மாற்றலானார். சென்னையில் இவரது கட்சிப் பணிகளும் விரி வடைந்தன. சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டதோடு சங்கத்திற்கு வழிகாட்டும் குழுவிலும் பங்களித்திரு க்கிறார். சென்னைக்கு வந்த பிறகு  இன்சூரன்ஸ் ஊழியர் பகுதிக் குழு செயலாளராகத் தேர்வானார். தொடர்ந்து   கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழுவிற்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு அந்தப் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறார். கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக இருந்தபோது சைதை பகுதிக் குழுவின் பொறுப்பாளாகப் பங்களித்திருக்கிறார். சங்கத்திலும், கட்சியிலும் அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதில் தோழரின் பங்கு அளப்பரியது என்று இன் றைய தலைமுறையினர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்கள். காப்பீட்டு ஊழியர்களுக்கு இவர் அரசியல் வகுப்புகளை நடத்தியது சிறப்பான தாக்கங்களை ஏற்படுத்தியது என்கிறார்கள். வைகுண்டத்தின் இணையர் சாந்தா திருச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்க உறுப்பினராக, அதன் எல்லா இயக்கங்களி லும்  பங்கேற்றிருக்கிறார்.  இவர்களுக்கு இரண்டு மகள்கள், மகன் உள்ளனர். “பிள்ளைகள் எப்போ தும் என் இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள்,” என்று குறிப்பிடும் வைகுண்டம், தொடக்கத்திலிருந்தே ‘தீக்கதிர்’, ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ உள்ளிட்ட இயக்க ஏடுகளை வாங்கு தையும் வாசிப்பதையும் ஆர்வத்தோடு செய்து  வருவதையும் அதே பெருமிதத்தோடு தெரிவிக்கிறார். ஓய்வுக்குப் பின்னும் ஓயாத பணி இவர் 1996ஆம் ஆண்டு அலுவலகத்தி லிருந்து ஓய்வு பெற்றார். அப்போது சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தார். 2012இல் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யிலும் காப்பீட்டு ஓய்வூதியர் சங்கத்திலும் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். “2001இல், இன்சூரன்ஸ் சந்தை தனியார் நிறுவனங்களுக்காகத் திறக்கப்பட்டது. தற்போது, 28 தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் 4 பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங் களும் செயல்படுகின்றன. லாப நோக்கத்துடன் தனி யார்  நிறுவனங்கள்    நெறியற்ற முறையில் செயல்பட்டாலும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் இன்னமும் தங்கள் சந்தைப் பங்கில் 35% வரை  தக்கவைத்துக் கொண்டிருப்பதுடன், மெதுவாக ஆனால் சீராக அதனை அதிகரித்து வரு கின்றன,” மக்கள் நலத்திற்கான நிறுவன சேவை குறித்த  அக்கறையைப் பகிர்கிறார். மனதில் கொண்ட மார்க்சியத் தத்துவத்தால் வளர்ந்த அக்கறை அது. நெடுங்காலமாக வெள்ளைச் சீருடைதான் இவரது அடையாளம். தற்போது 90 வயதில் இயக்கத்திற்குத் தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகிறார். இப்போதும் கட்சி/சங்க நிகழ்வுகளில் பங்கேற்கும் இவரை சக தோழர்கள் “இளைஞர் அணித் தலைவர்” என வாஞ்சை யோடு குறிப்பிடுகிறார்கள்.  முன்னோடித் தோழர் வைகுண்டம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றி வரும் உணர்வுப்பூர்வமான இயக்கப் பணி பாராட்டுக்குரியது - பின்பற்றத்தக்கது.