tamilnadu

img

4 பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும்

4 பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை 27 - தஞ்சைக் கோட்டம், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 63 ஆவது மாநாடு ஜூலை 25-26 தேதிகளில் தஞ்சாவூர், தீர்க்க சுமங்கலி மகால் மற்றும் சரோஜ் நினைவகத்தில் நடைபெற்றது. சனிக்கிழமை தீர்க்கசுமங்கலி மகாலில் சங்கத்தின் பொது மாநாடும், கோட்ட சங்கத் தலைவர் எஸ். செல்வராஜ் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.சேதுராமன் தலைமை வகித்தார். பி. சரவணபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா தொடக்கவுரையாற்றினார். மாநாட்டை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் உ.வாசுகி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், லிகாய் முகவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.பூவலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரமேஷ், மேனாள் தலைவர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பி.சத்தியநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தென் மண்டல ஊழியர் சங்கத்தின் மேனாள் பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன் நிறைவுரையாற்றினார். எஸ்.செல்வராஜ் ஏற்புரையாற்றினார். ஆர்.சீதளா நன்றி கூறினார். மாநாட்டில் இரா.இயேசுதாஸ், ‘அம்பேத்கரை அறிந்து கொள்வோம்’ என்னும் தலைப்பில் அம்பேத்கரின் 37 தொகுப்புகள் குறித்து சுருக்கக் குறிப்புகள் எழுதியதில், பகுதி 2 வெளியிடப்பட்டது. இந்த நூலை பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்டார். இரா.இயேசுதாஸ் மற்றும் இதனைத் தொகுத்து, குறுகிய காலத்தில் ஒளியச்சு செய்து அனுப்பிய ச.வீரமணி மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர். சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிறன்று சரோஜ் நினைவகத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் மாநாட்டில் தலைவராக வி.சேதுராமன், பொதுச் செயலாளராக விஜயகுமார், பொருளாளராக ஸ்ரீதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும். நான்கு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும். எல்.ஐ.சி.யில் மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களை உடனடி பணி நியமனம் செய்ய வேண்டும்.  மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்துக் கிளைகளிலும் வாசகர் வட்டம் அமைத்திட வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை கைவிட வேண்டும். ஜிஐசி நிறுவனங்களுக்கு உடனே ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஜிஐசி குடும்ப பென்சன்தாரர்களுக்கு 30 சதவீத பென்சன் அமல்படுத்த வேண்டும்.  அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கிட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வியை வியாபாரம் ஆக்கும் புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.  நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்திடவும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் வேண்டும். கீழடி ஆய்வறிக்கையை உள்ளது உள்ளபடி மாற்றம் செய்யாமல் வெளியிட வேண்டும்.  தீண்டாமை, சாதி ஆணவப் படுகொலை மற்றும் சாதிய பாகுபாடுகளை தடுக்கும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முயற்சிக்கும் போக்கை கைவிட வேண்டும். பாலிசிதாரர் சேவையை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.