10 படித்தவர்களுக்கு 4,987 அரசுப்பணிகள்
ஒன்றிய அரசின் உளவுத்துறை யில் உள்ள 4 ஆயிரத்து 987 பாதுகாப்பு உதவியாளர் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி - குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது - குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சமாக 27 வயது நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அதிக பட்ச வயது வரம்பில் தரப்படும். எந்த மாநிலத்தில் உள்ள காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கி றோமோ அந்த மாநிலத்தில் வசிப்பதற் கான சான்று இருக்க வேண்டும். அதோடு, அந்த மாநிலத்தின் அலுவல் மொழியில் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். தேர்வு முறை - மூன்று கட்டங்களாகத் தேர்வுகள் நடைபெறும். முதல் கட்டத்தில் தேர்ச்சி பெறுபவர் இரண்டாம் கட்டத் தேர்வுக்குத் தகுதி பெறுவார். இதில் தேர்ச்சி பெறு பவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வுக்கான பாடத்திட்டம், மாநில வாரியான காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கவும், முழுமையான அறிவிக்கையைப் பெறவும் www.mha.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி ஆகஸ்டு 17, 2025 ஆகும்.
574 விரிவுரையாளர் பணி
574 விரிவுரையாளர் பணி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 574 தற்காலிக விரிவுரை யாளர் பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இதற்கான மாத ஊதியம் ரூ.25,000 ஆகும். வயது வரம்பு - ஜூலை 1, 2025 தேதிப்படி 57 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி - விண்ணப்பிக்கும் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 55 விழுக்காடு (எஸ்.சி., எஸ்.டி., 50 விழுக்காடு) மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, அந்தப் பாடப்பிரிவில் NET அல்லது SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றி ருத்தல் அவசியமாகும் அல்லது பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிமுறைகளின்படி ஆய்வுப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வு முறை - நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கடைசித் தேதியான ஆகஸ்டு 4, 2025க்குள் விண்ணப்பிக்கவும், கூடுதல் விபரங்களைப் பெறவும் www.tngasa.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.
2,300 கிராம உதவியாளர் பணியிடங்கள்
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி அலுவல கங்களில் பணியாற்றும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். இதற்குத் தகுதியானவர்கள் விண்ணப் பங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். கல்வித்தகுதி - விண்ணப்பதா ரர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதோடு, பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருப்பது அவசியமாகும். பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு - 2,300 காலியிடங்களுக்கு விண்ணப் பிக்கப் போகிறவர்களில் பொதுப்பிரிவினராக இருந்தால் 21 முதல் 32 வயது வரையில் இருக்க வேண்டும். இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டு கள் தளர்ச்சி வழங்கப்படும். எந்தக் காலியிடத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ அந்தக் காலியிடம் இருக்கும் கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும். தேர்வு முறை - விண்ணப்பதா ரர்களில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் படுவார்கள். அந்தத் தேர்வின் போது விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். நேர்முகத் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான வினாக் கள் எழுப்பப்படும். www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை நிரப்பி ஆகஸ்டு 5, 2025க்குள் அனுப்பி வைக்க வேண்டும். எந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்கிறோமோ, அந்தந்த மாவட்ட இணைய தளங்களிலும் இந்தப் பணியிட நிரப்புதல் பற்றிய விபரங்கள் உள்ளன.