tamilnadu

img

“பாஜகவின் தலையாட்டி பொம்மை எடப்பாடி பழனிசாமி”

திருவாரூரில் தீக்கதிருக்கு முதற்கட்டமாக 245 சந்தாக்கள் அளிப்பு

திருவாரூரில்  பெ. சண்முகம்  கடும் தாக்கு

திருவாரூர், ஜூலை 19 - “மோடி - அமித் ஷா ஆட்டுவதற் கெல்லாம் ஆடக்கூடிய தஞ்சாவூர் பொம்மையாக 7-8 ஆண்டுகள் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, இப்  போது கம்யூனிஸ்டுகளை குற்றம்  சாட்டுவது மிகவும் வேடிக்கையானது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் கடுமையாக சாடியுள்ளார். திருவாரூரில் சனிக்கிழமை (ஜூலை 19) அன்று நடந்த செய்தி யாளர் சந்திப்பில் பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியின் கம்யூனிஸ்ட் விரோதப் பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்தார்.

“விவசாய விரோத சட்டங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்”

“வேளாண் விரோதச் சட்டங்களை  ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த போது, அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தது. அவர்கள் எதிர்த்திருந்தால் அப்படி ஒரு சட்டமே  வந்திருக்காது,” என்று சண்முகம் அம்  பலப்படுத்தினார். “இதன் காரணமாகத்தான் லட்சக்க ணக்கான விவசாயிகள் ஆண்டுக்க ணக்கில் போராட வேண்டியதாயிற்று. 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிரிழந்தனர். அந்தச் சட்டத்தை ஆதரித்ததற்காக இந்திய விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண் டும்” என்று வலியுறுத்தினார்.

4 ஆண்டுகளில் அதிமுக நடத்திய போராட்டங்கள் என்ன?

“எடப்பாடி தனது பிரச்சாரக்  கூட்டங்களில், தான் விவசாயி களுக்கு ஏதோ பெரிதாக நன்மைகள்  செய்துவிட்டது போல பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். உண்மை நிலைமை விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும்” என விமர் சித்த பெ.சண்முகம், “எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி என்ன செய் தார்?” என்றும் கேள்வி எழுப்பினார். “கடந்த 4 ஆண்டுகளில் அதி முக எத்தனை போராட்டங்கள் நடத்தி யுள்ளது? எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டு மக்க ளின் குரலை எதிரொலிக்கும் வகை யில் எடப்பாடி என்ன செய்திருக்கி றார்?” என்று கேள்வி எழுப்பிய சண்முகம், “தேர்தல் நெருங்குவதால் மட்டுமே பிரச்சார இயக்கமும் சில ஆர்ப்பாட்டங்களும் நடத்துகிறார்” என்று விமர்சித்தார். “கடந்த நான்கரை ஆண்டுகளாக எதுவுமே செய்யாமல், ஒன்றிய பாஜக  அரசு ஆட்டிவைக்கும் எல்லாவற்றிற் கும் ஆடக்கூடிய தலையாட்டி பொம்  மையாகத்தான் இருந்தார்” என்றும் சண்முகம் சாடினார்.

பாஜக கூட்டணி:  ‘வஞ்சக வலை’

“2024 நாடாளுமன்ற தேர்தலில்  ‘பாஜகவோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ என்று பகிரங்க மாக தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதி யளித்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது என்ன மாற்றம் பாஜக-வில்  ஏற்பட்டுவிட்டது? இதற்கு அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல  வேண்டும்,” என்று கூறிய பெ. சண்  முகம், “பாஜகவோடு சேர்ந்து கொண்டு  எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்டு களுக்கு அழைப்பு விடுவது மிகவும் வேடிக்கையானது. மக்களுக்கு விரோதமான, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, வகுப்புவாத கொள்கை களைக் கடைப்பிடிக்கும் பாஜகவோடு  சேர்ந்திருக்கும் எடப்பாடி, எங்க ளுக்கு அழைப்பு விடுப்பது அபத்த மானது”ஆகும் என்று பதிலடி கொடுத்தார்.

பாஜக - அதிமுக கூட்டணியை முறியடிப்பதே சிபிஎம் நிலைப்பாடு

“2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக  - அதிமுக கூட்டணியை முற்றிலும் முறியடிப்பதே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேர்தல் அணுகு முறை,” என்று குறிப்பிட்ட பெ. சண் முகம்,  “பாஜக ஆட்சி தொடர்வது இந்தி யாவிற்கு கேடு விளைவிக்கும். நாடு  முழுவதும் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற  துன்பங்களுக்கு மக்கள் ஆளாகி யுள்ளனர். பாஜக ஆட்சியைத் தூக்கி எறிவதே எங்கள் முதன்மையான கடமை” என்று குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்ட் போராட்ட வரலாறு தெரியாத  எடப்பாடி பழனிசாமி

“திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மக்கள் கோரிக்கைகளை முன்  வைத்து நாங்கள் நடத்திய போராட் டங்களின் விவரங்கள் எடப்பாடிக்கு தெரியாமல் போயிருந்தால், ‘தீக்க திர்’ பத்திரிகையின் கடந்த 4 ஆண்டு  இதழ்களை அனுப்பித் வைக்கத் தயா ராக இருக்கிறேன். அதைப் படித்தா வது, நாங்கள் நடத்திய பல நூற்றுக்க ணக்கான போராட்டங்களை அவர் தெரிந்து கொள்ளட்டும்,” என்று சண் முகம் கூறினார்.

“மக்களுக்கு சாதகமான திட்டங் களை அரசு நிறைவேற்றினால் வரவேற் போம், பாராட்டுவோம். மக்களுக்கு எதி ரான கொள்கைகளை எதிர்ப்போம். இதுதான் எங்கள் தெளிவான நிலைப் பாடு” என்றும் அவர் விளக்கினார். மூன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள் கொடிக் கம்பப் பாதுகாப்பில் வெற்றி: “கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று ஜனவரி மாதம் தனி  நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு எதிராக எங்கள் கட்சி வழக்கு தொடுத்தது. இதை மூன்று நீதிபதிகள் கொண்ட  முழு அமர்வுக்கு மாற்றி, கொடிக்கம்பங் களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இது கொடி உரிமை காக்கும்  எங்கள் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி” என்று சண்முகம் தெரிவித்தார். நீர்நிலை ஆக்கிரமிப்பு: பார பட்சமான அணுகுமுறை : “அடையாறு  - கூவம் கரையோரக் குடிசைகளை அகற்ற கடுமையான உத்தரவு வந்துள் ளது. ஆனால், அதே கரையில் உள்ள  பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், நட்சத்திர ஹோட்டல்கள் குறித்து நீதிமன்றம் எதுவும் சொல்வ தில்லை. சாதாரண மக்கள் மட்டும் அரசு  நிர்வாகத்தின் கண்ணுக்கு உறுத்த லாக உள்ளனர். இந்த பாரபட்சமான அணுகுமுறையை ஏற்கமுடியாது” எனவும் குறிப்பிட்டார்.

ஆலய வழிபாட்டு உரிமை உறுதி:  “நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் வர லாற்றுத் தீர்ப்பு வழங்கியுள்ளார். பட்டி யல் சாதி மக்கள் ஆலய வழிபாட்டில் பங்கேற்பதை தடுக்கும்போது, அதிகாரி கள் சமாதான கூட்டம் என்ற பெயரில்  காலம் கடத்தக்கூடாது என்று தெளிவு படுத்தியுள்ளார். இவை எல்லாம்  எங்கள் நீண்ட நெடிய போராட்டங் களுக்கு கிடைத்து வரும் வெற்றிகளே!” என்றும் பெ. சண்முகம் விவரித்தார். “தமிழிசை சவுந்தர்ராஜன் ‘சூட் கேஸ் பார்க்கிறார்கள்’ என்று எங்களைக்  கூறியுள்ளார். பாஜக கண்டெய்னர் கண்டெய்னராக அம்பானி, அதானி, வேதாந்தா, டாட்டாவிடமிருந்து ஆயி ரக்கணக்கான கோடி ரூபாய் பெறு வதை விட, எங்கள் உண்டியல் வசூல் எவ்வளவோ மேல்,” என்று பதிலடி கொடுத்தார். செய்தியாளர் சந்திப்பின் நிறை வில்,  “போராடுவதற்கு கம்யூனிஸ்டு களுக்கு எடப்பாடி பழனிசாமி சொல் லித்தர வேண்டிய அவசியமில்லை. அவர் சொல்லி பாடம் கேட்கும் இடத்தில்  நாங்களும் இல்லை. 2026-இல்  மக்கள் நலனுக்காக உண்மையி லேயே போராடும் சக்திகளை தேர்ந்தெ டுப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். பேட்டியின் போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.  சுந்தரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ். கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக திருவாரூரில் தீக்கதிர்  சந்தா சேர்ப்பு நிகழ்ச்சியில் பெ.சண் முகம் பங்கேற்று, வாசகர்களிடம் சந்தாக் களை பெற்றார்.

“மக்களுக்கு சாதகமான திட்டங் களை அரசு நிறைவேற்றினால் வரவேற் போம், பாராட்டுவோம். மக்களுக்கு எதி ரான கொள்கைகளை எதிர்ப்போம். இதுதான் எங்கள் தெளிவான நிலைப் பாடு” என்றும் அவர் விளக்கினார். மூன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள் கொடிக் கம்பப் பாதுகாப்பில் வெற்றி: “கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று ஜனவரி மாதம் தனி  நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு எதிராக எங்கள் கட்சி வழக்கு தொடுத்தது. இதை மூன்று நீதிபதிகள் கொண்ட  முழு அமர்வுக்கு மாற்றி, கொடிக்கம்பங் களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இது கொடி உரிமை காக்கும்  எங்கள் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி” என்று சண்முகம் தெரிவித்தார். நீர்நிலை ஆக்கிரமிப்பு: பார பட்சமான அணுகுமுறை : “அடையாறு  - கூவம் கரையோரக் குடிசைகளை அகற்ற கடுமையான உத்தரவு வந்துள் ளது. ஆனால், அதே கரையில் உள்ள  பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், நட்சத்திர ஹோட்டல்கள் குறித்து நீதிமன்றம் எதுவும் சொல்வ தில்லை. சாதாரண மக்கள் மட்டும் அரசு  நிர்வாகத்தின் கண்ணுக்கு உறுத்த லாக உள்ளனர். இந்த பாரபட்சமான அணுகுமுறையை ஏற்கமுடியாது” எனவும் குறிப்பிட்டார். ஆலய வழிபாட்டு உரிமை உறுதி:  “நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் வர லாற்றுத் தீர்ப்பு வழங்கியுள்ளார். பட்டி யல் சாதி மக்கள் ஆலய வழிபாட்டில் பங்கேற்பதை தடுக்கும்போது, அதிகாரி கள் சமாதான கூட்டம் என்ற பெயரில்  காலம் கடத்தக்கூடாது என்று தெளிவு படுத்தியுள்ளார். இவை எல்லாம்  எங்கள் நீண்ட நெடிய போராட்டங் களுக்கு கிடைத்து வரும் வெற்றிகளே!” என்றும் பெ. சண்முகம் விவரித்தார். “தமிழிசை சவுந்தர்ராஜன் ‘சூட் கேஸ் பார்க்கிறார்கள்’ என்று எங்களைக்  கூறியுள்ளார். பாஜக கண்டெய்னர் கண்டெய்னராக அம்பானி, அதானி, வேதாந்தா, டாட்டாவிடமிருந்து ஆயி ரக்கணக்கான கோடி ரூபாய் பெறு வதை விட, எங்கள் உண்டியல் வசூல் எவ்வளவோ மேல்,” என்று பதிலடி கொடுத்தார். செய்தியாளர் சந்திப்பின் நிறை வில்,  “போராடுவதற்கு கம்யூனிஸ்டு களுக்கு எடப்பாடி பழனிசாமி சொல் லித்தர வேண்டிய அவசியமில்லை. அவர் சொல்லி பாடம் கேட்கும் இடத்தில்  நாங்களும் இல்லை. 2026-இல்  மக்கள் நலனுக்காக உண்மையி லேயே போராடும் சக்திகளை தேர்ந்தெ டுப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். பேட்டியின் போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.  சுந்தரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ். கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக திருவாரூரில் தீக்கதிர்  சந்தா சேர்ப்பு நிகழ்ச்சியில் பெ.சண் முகம் பங்கேற்று, வாசகர்களிடம் சந்தாக் களை பெற்றார்.