மதுரை மாநகர்-புறநகர் மாவட்டங்களில் 200 பேர் உடல் தான படிவங்கள் அளிப்பு
மதுரை, செப். 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மஹபூப்பாளையத்தில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற உடல்தானம் வழங்க உறுதியளிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா. செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழுஉறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகியோரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக உடல்தானம் வழங்க உறுதி படிவங்களை அளித்தனர். இதில் துணைமேயர் தி.நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர். மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் முன்னாள் செய்தி யாசிரியரும் மூத்த துணை ஆசிரியருமான ப. முருகன் உடல்தானம் வழங்க உறுதியளித்துள்ளார். மதுரை புறநகர் மஹபூப்பாளையத்தில் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் உடல்தானம் வழங்க படிவங்களை வழங்கி, உறுதி மொழியேற்றனர்.
