41 பேரில் 18 பெண்கள், 9 குழந்தைகள் பலி: துயரின் உச்சம்
கே.பாலபாரதி வேதனை
கரூர், செப்.29 - கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக் கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரில் 18 பெண்களும் 9 குழந்தைகளும் அடங்குவர். இது துயரின் உச்சம் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி தெரி வித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், சிகிச்சை பெற்று வரு பவர்களைச் சந்திக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்கள் திங்களன்று கரூர் வந்தனர். கரூர் ஏமூர்புதூரைச் சேர்ந்த அருக்கானி, சந்திரா, பிரியதர்ஷினி, தர்னிகா, பிரதீக் மற்றும் வேலுச்சாமிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த விமல் மகன் துருவிஷ்ணு (வயது 2) ஆகியோ ரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குடும்பத்தின ருக்கு ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக, கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல் கூறினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி, மத்திய குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.சசிகலா, மாநில பொருளாளர் ஜி.ராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணியன், கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, மாநகரச் செயலாளர் எம்.தண்ட பாணி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ரஞ்சிதா, மாவட்டத் தலைவர் சசிகலா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சதீஷ், ராஜேந்திர பிரசாத், கணேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். ‘கட்சிக்காக செல்லவில்லை’ உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தலை வர்களிடம் கூறியபோது, “எங்கள் கிராமத்தி லிருந்து தமிழக வெற்றிக் கழக கட்சியினர் வாக னம் வைத்து ஊரில் இருந்தவர்களை விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். யாரும் கட்சிக்காகச் செல்லவில்லை, நடிகர் விஜய்யைப் பார்ப்பதற்காகத்தான் சென்றனர். அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ள னர்” என்றனர். மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் என தங்களது உறவுகளை இழந்த குடும்பத் தினர் கதறி அழுதனர். காலதாமதமே முக்கிய காரணம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கே.பால பாரதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியல் வரலாற் றில் ஒரு புதிய, துயரமான நிகழ்வு. முதல் முறை யாக நடந்திருக்கும் மிகவும் மோசமான சம்பவம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சார பயணத்தில் பல இடங்களில் ஒன்று, இரண்டு சம்பவங்கள் நடந்தன. இப்போது கரூரில் அது 41 ஆக மாறியிருக்கிறது. இதில் 18 பெண் களும், 9 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களும் குழந்தை களுமே. இது கடுமையான வேதனையைத் தரு கிறது. இளம் பெண்களும், இளம் குழந்தைகளுக் கான தாய்மார்களும் இறந்திருக்கிறார்கள். சிகிச்சையில் இருக்கக்கூடியவர்களைச் சந்தித்துப் பேசியபோது, விஜய் வருகையின் கால தாமதமே மிக முக்கியக் காரணம் என்று தெரிந்தது. காலை எட்டு மணியிலிருந்தே வந்த மக்கள், ஒன்பது மணி, பத்து மணி, பன்னிரண்டு மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டது. அவர் களில் பலர் கட்சி உறுப்பினர்களே அல்ல, விஜய் ரசிகர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள்தான். ஆறு அல்லது ஏழு மணி நேரம் கால தாமத மானதுடன் பிரச்சனை தீவிரமாகிவிட்டது. இந்தக் கால தாமதத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாகப் பொறுப்பேற்க வேண்டும். ஏன் இந்தக் காலதாமதம் ஏற்பட்டது என்பதை தமிழக மக்களிடம் விளக்க வேண்டும். இங்கு தான் இந்த சோகம் ஆரம்பமாகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் முக்கியம் கரூரில் புதிய இடத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்பது உளவுத்துறைக்கும் தமிழ் நாடு அரசின் காவல்துறைக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். மாவட்ட அதிகாரிகள் இருக்கிறார் கள். இந்த இடத்தை தமிழக வெற்றிக் கழகம் கேட்டிருந்தாலும்கூட, எப்படி அனுமதி கொடுத்தார் கள் என்பது கேள்வி. ஒரு பெரிய அரசியல் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெறும்போது கூட்ட நெரிசல் ஏற்படா மல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண் டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கா மல் தடுக்க வேண்டும். இந்த சோகத்தை அரசியல் நோக்கத்திற்கோ அல்லது பதவிக்கான அரசியலாகவோ மாற்று வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, நிராகரிக் கிறோம். இறந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங் கலைத் தெரிவிப்பதோடு, தமிழ்நாட்டு மக்கள் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார். (ந.நி)
