கிராம வங்கிகளில் 13, 217 பணியிடங்கள்
பிராந்திய கிராம வங்கிகளில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பிரிவுகளில் 13 ஆயிரத்து 217 காலிப் பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர்கள், அதிகாரிகள் (முதல் நிலை), அதிகாரிகள் (இரண்டாம் நிலை) மற்றும் அதிகாரிகள் (மூன்றாம் நிலை) ஆகியவற்றில் காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : அலுவலக உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் (முதல் நிலை) ஆகிய பணியிடங்களுக்கு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரிகள்(முதல்நிலை) பணியிடங்களுக்கு கணினித்திறன் பெற்றிருத்தல் அவசியம். அதிகாரிகள் (இரண்டாம் நிலை) மற்றும் அதிகாரிகள்(மூன்றாம் நிலை) ஆகியவற்றிற்கு பல துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதால், அந்தத்துறைக்கு ஏற்றவாறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கையில் இந்த விபரங்கள் உள்ளன. கூடுதல் தகுதி - அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரிகள்(முதல் நிலை) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் தேர்வு முறை : அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு இரண்டு கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறும். இந்தப் பணிக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. அதிகாரிகள் தேர்வைப் பொறுத்தவரையில், இரண்டு கட்ட எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு நேர்முகத் தேர்வும் இருக்கும். தேர்வுகள் நடைபெறும் உத்தேச மாதங்கள் முதல்நிலைத் தேர்வு - நவம்பர் 2025 இரண்டாம் நிலைத் தேர்வு - டிசம்பர் 2026 நேர்முகத் தேர்வு - பிப்ரவரி 2026 தேர்வுகளுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, துறை வாரியான தகுதிகள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விபரங்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் இருந்து கிடைக்கும்.
புலனாய்வு பிரிவில் காலியிடங்கள் 455
ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் புல னாய்வு பிரிவில் (INTELLIGENCE BUREAU) 455 பாதுகாப்பு உதவியாளர்(வாக னங்கள்) காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி : குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ, அந்த மாநிலத்தில் குடியிருப்பதற்கான சான்று இருக்க வேண்டும். தொழிற்தகுதி : இலகுரக வண்டி(LMV) ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களை சரி செய்யும் திறன் அவசியம். இவை நேர்முகத்தேர்வின்போது பரிசோதிக்கப்படும். வயது வரம்பு : குறைந்த பட்சவயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி தரப்படும். தேர்வு முறை : Tier I,II என இரண்டு தேர்வு நடைபெறும். முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இரண்டிலும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வுக்கான மையங்கள் இருக்கும். விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.650 , பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.550 செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணைப்பு, மாநில வாரியான காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு https://www.mha.gov.in/en என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி செப்டம்பர் 28, 2025.
உச்சநீதிமன்றத்தில் பணி
இந்திய உச்சநீதிமன்றத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்பை நிறைவு செய்தவர்க ளுக்கு Court Master என்ற பணியில் சேருவதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இள நிலைப்பட்டம், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட விபரங்களைப் பெற www.sci.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிக்கையைப் படிக்கலாம்.
சென்னை மாநகராட்சியில் நர்ஸ்
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சி சுகாதார இயக்கத்தில் பணிபுரிய செவி லியர் மற்றும் சமூகப் பணி யாளர்கள் தேவைப்படுகின்றனர். மொத்தம் 305 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. விண்ண ப்பிக்க விரும்புவோர் கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் உள்ளிட்ட விபரங்களை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.