tamilnadu

img

செருவாவிடுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

செருவாவிடுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் 

தஞ்சாவூர், ஜூலை 25-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், செருவாவிடுதி வடக்கு, பெரியநாயகிபுரம் ஆகிய பகுதிகளுக்காக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செருவாவிடுதி தெற்கு ஸ்ரீ அம்பாள் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.  இதில், மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மனைப்பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.