பேருந்து கட்டணம் உயர்வு இல்லை’
போக்குவரத்துத் துறை திட்டவட்டம்
சென்னை, ஜூலை 22- ‘தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை’ என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இந்தி யாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைந்த கட்ட ணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக பேருந்து கட்டணம் உயர்வு குறித்த தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அமைச்சர் திட்டவட்டம் இந்நிலையில், அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “பேருந்து கட்டணம் உயர்வு என்பது வதந்தியாக பரவுவது வழக்கமாக இருக்கிறது. இதனை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் கிடையாது. ஏழை-எளிய மக்கள் மீது சுமை ஏற்றப்படக் கூடாது என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்ட ணத்தை ஏற்றக் கூடாது என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கி யிருக்கிறார். எனவே இப்போதும் தெளிவாக சொல்கிறேன், அரசு போக்கு வரத்துக் கழகத்தை பொறுத்தவரை பேருந்துக் கட்டணம் நிச்சயம் இருக்காது” என்றார்.