tamilnadu

“இந்தியாவின் இறையாண்மை சமரசம் செய்ய முடியாதது”

“இந்தியாவின் இறையாண்மை  சமரசம் செய்ய முடியாதது” 

அமெரிக்காவுக்கு சீனத் தூதரக அதிகாரி பதிலடி

புதுதில்லி, ஆக. 9 - ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவை அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டி வருகிறார். இந்தியப் பொருட்களுக் கான வரியையும் 50 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார். இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக, வரி விதிப்பு என்ற மிரட்டல் ஆயுதத்தை,  அமெரிக்கா கையில் எடுத்துள்ள நிலை யில், “இந்தியாவின் இறையாண்மை யானது, சமரசம் செய்ய முடியாதது” என்று தில்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வின் அழுத்தத்தை கடுமையாக விமர் சித்து, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தலையங்கத்தையும், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்தியாவிற்கு அவர் ஆதரவு தெரி வித்துள்ளார்.  ‘தி இந்து’ நாளிதழ் தலையங்கத் தில், ‘புவிசார் அரசியல் போட்டிகளில் இந்தியா பகடைக்காயாக மாறக் கூடாது’ என எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும் ‘அமெரிக்காவோ ஐரோப்பிய ஒன்றியமோ இந்தியாவின் வர்த்தகப் கூட்டாளிகளை தீர்மானிக்க அனுமதிக்க முடியாது’ என்று இந்தியாவின் பல முனை மற்றும் இறையாண்மை கொண்ட வெளியுறவுக் கொள்கையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் பேசப்பட்டிருந்தது.  இந்த தலையங்கத்தைப் பகிர்ந்து, ஆதரவு தெரிவித்துள்ள சீனத் தூதர கத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், அதில், “எந்தவொரு நாடும் இந்தி யாவுடன் எவ்வளவு நெருக்கமான உற வைக் கொண்டிருந்தாலும், அவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை யில் தலையிட முடியாது” என்ற வரிக ளை தனது சமூக வலைத்தளத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் “இந்தியாவின் இறை யாண்மை சமரசம் செய்ய முடியாதது” என்றும் யூ ஜிங் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும், சீனாவும் அமெரிக்கா வின் வர்த்தகப் போருக்கு ஆளாகி யிருக்கும் இந்தச் சூழலில், சீனத் தூத ரக செய்தித் தொடர்பாளரின் கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2020-இல் கால்வான் பள்ளத்தாக் கில் இந்தியா - சீனாவிற்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி முதல்முறையாக இம்மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு செல்ல விருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.