புதுதில்லி, ஏப்.16- தில்லி மாளவியா நகரில் பிரபல உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் உணவுப்பொருட்களை வீடுகளுக்குச் சென்று (பீசா) ஒப்படைக்கும் சிறுவனுக்கு கொரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி மாஜிஸ்திரேட் பி.எம்.மிஸ்ரா தெரிவித்துள்ளார். அந்தச் சிறுவனிடம் பீசாக்களை வாங்கிய 72 குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பீசா விற்கும் 17 சிறுவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளளனர். கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவன் தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட உணவு நிறுவனம் தனது விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தில்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உறுதிப்படுத்தியுள்ளார்.