பாஜகவின் மாணவ பிரிவான ஏபிவிபி தேசிய தலைவர் மருத்துவர் சுப்பையா. சென்னை நங்க நல்லூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 10ம் தேதி சாதாரண பார்க்கிங் பிரச்சனைக்காக பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும் 62 வயது பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து தகாத செயல்களில் ஈடுபட்டார். இதையடுத்து கடந்த ஜூலை 11ம் தேதி சிசிடிவி ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை வரை இச்சம்பவம் குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இன்று பிற்பகலில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 271, பிரிவு 427 மற்றும் தமிழ்நாடு பெண்மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.