tamilnadu

img

நெல்லை ஆணவப்படுகொலை வழக்கு - சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

நெல்லை கவின் செல்வகணேஷ் சாதி ஆணவப்படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் தேதி பாளையங்கோட்டையில் கவின் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்டுச் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கவின் தனது அக்காவுடன் பேசியது பிடிக்காததால் கொலை செய்தேன் என சுர்ஜித் என்பவர் போலீசில் சரணடைந்தார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.
இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டது. எனினும் அவர்களையும் கைது செய்யக்கோரி கவின் உறவினர்கள் 3 ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலை குற்றவாளி சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்  உத்தரவிட்டுள்ளார்.